பக்கம்:தரங்கிணி.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

i09

"அது சரி; நாம் ஏன் கலியாணஞ் செய்து கொள்ள முடியாது என்கிருய்?

ஜோஸப் தலைதாழ்த்தியபடி, "நான் கிறிஸ்துவன். நீ ஓர் இந்துப் பெண். நீங்கள் உயர்ந்த குலம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள்...'

'வார்த்தையை வளர்த்தாதே ஜோஸப்! இரண்டில் ஒன்று பதில் சொல்லு. என்னைப் பொறுத்தவரையில் சாதி யும் மதமும் நான் கொண்டுள்ள முடிவுக்குக் குறுக்கே நிற்ப தாக நான் எண்ணவில்லை. நீ அவ்விதம் கருதுகிருய் ப்ோலும்? வேறு மதத்தினளான நான், உன்னைக் கலியாணஞ் செய்துகொள்ளுவதற்கு உங்கள் மதம் தடை யாக இருக்குமா? நான் உன்னைக் கலியாணஞ் செய்து கொள்வதென்ருல், உங்கள் மதத்தில் சேர்ந்துவிட வேண் டுமா? அவ்விதம் சேர்ந்துவிடவேண்டியது அவசியம் என்ருல், நான் மதம் மாறவும் தயாராயிருக்கிறேன்...'

அவள் பேச்சில் உறுதி தொனித்தது. ஜோஸப் அவளைப் பிரமிப்போடு பார்த்தவாறு, - 'அதற்கெல்லாம் இப்போது அவசியமில்லை, தரங்கிணி! அன்பினல் எப்படியோ பிணைக்கப்பட்ட இருவர், அவரவர் மதத்தில் இருந்தபடியே கலியாண்ஞ் செய்துகொள்ளலாம். இப்படி எத்தனையோ கலியாணங்கள் நாடோறும் நடந்து வருகின்றன...' -

"அப்படியா! மிக்க மகிழ்ச்சி' என்ற தரங்கிணி, ஜோஸப், நீ உடனே உன் பெற்முேரிடஞ் சொல்லி, நம் கலியாணத்துக்கு ஏற்பாடு செய். என்ன? என்று மொழிந் தாள். -

ஜோஸப் குறுக்கிட்டு, "நான் என் தாய் தகப்பனரிடம் சொல்லி ஏற்பாடுசெய்வது இருக்கட்டும். முதலில் இதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/110&oldid=1338526" இலிருந்து மீள்விக்கப்பட்டது