பக்கம்:தரங்கிணி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

110

என்று தங்கை காதரீன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப் பேர்ப்பட்டவர்கள் நீச சாதி என அவர்கள் கருதும் கிறிஸ்துவனை என்ன, நீ கலியாணஞ் செய்துகொள்ளச் சம்மதம் அளிப்பார்களா?...'

தரங்கிணி இது கேட்டுத் தயங்கவில்லை. "நாம் கலியாணஞ் செய்துகொள்ளுவதற்கு, என் பெற்ருேர் சம்மதத்தை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு அவசியமிருப்பதாகவும் நான் கருதவில்லை. ஆகவே, நீ அது பற்றியெல்லாம் கவலைகொள்ள வேண்டாம். உன் பெற்ருேர் ஆட்சேபிக்க மாட்டார்களே! அதைச் சொல். அவர்கள் அங்கீகாரத்துடனும், ஆசியுடனும், நீ என்னைக். கலியாணஞ் செய்துகொள்ள முடியும் என்று நீ உறுதி யளித்தால் போதும். இப்போதே, இப்படியே உன்னுடன் நான் வந்துவிடத் தயார்...' -

"நீ என்னுடன் வந்துவிடலாம். ஆனல், உன் தந்தை மைனர் பெண்ணுன உன்னை ஏமாற்றி நான் கடத்திக் கொண்டு போய்விட்டேன் என்று வழக்குத் தொடுத்தால்? இக் கலியாணம் சட்டப்படி செல்லாது என்று வாதித்த தால்?:

ஜோஸப் சட்டப் பிரச்சினையைக் கிளப்பினன். "என் அப்பா நீ நினைக்கிறபடி வழக்கு எதுவும் எடுக்க மாட்டார். அப்படித் தொடுத்தாலும், அது செல்லுபடி யாக்ாது. ஏனென்ருல் நான் மைனர் பெண்ணல்ல; வயது இருபதுக்கு மேலாகிறது."

ஜோஸப் நெற்றியைக் கைவிரல்களால் அழுத்தித் தடவிக்கொண்டு, சிறிதுநேரம் மெளனமாயிருந்தான்.

தரங்கிணி, அவனைக் கவனித்தபடியே, "என்ன யோசிக் கிருய்? ஜோஸப் என்னைக் கலியாணஞ் செய்துகொள்ளும் விஷயத்தில், ஏதாயினும் சங்கடம் இருந்தால் சொல்லு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/111&oldid=1338527" இலிருந்து மீள்விக்கப்பட்டது