பக்கம்:தரங்கிணி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

112

தரங்கிணி, இச்சமயம் முகத்தைக் கவிழ்த்துக் கொண் டாள். -

ஜோஸப் அவளைப் பார்த்துக்கொண்டே பேசினன்: "அண்ணனுக்குக் கலியாணமான பின்னர்தான் தம்பிக்குத் திருமணஞ் செய்ய வேண்டுமென்று, இந்துக்களாகிய நீங்கள் கொள்கை கொண்டிருப்பது தெரியும். நாங்கள் அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. எவ்வெப்போது எப்படி யெப்படிச் செளகர்யம் ஏற்படுகிறதோ, அதற்குத் தகுந்த வாறு நாங்கள் எந்தக் காரியத்தையும் வசதியாக நடத்திக் கொண்டு போவோம்.' -

"அப்படியிருக்கும்போது, வேறென்ன யோசனை?..."

தரங்கிணி அவன் முகத்தை மறுபடியும் கவனித்தபடி கேட்டாள்.

ஜோஸபின் நெற்றியில் சிந்தனை ரேகைகள் படரலா யின. அவன் தரங்கிணியைக் கடைக்கணித்தவாறு, 'ஒன்று மில்லை; தரங்கிணி! நீ இம் முடிவுக்குத் திடீரென எப்படி வந்தாய்? உன் மனம் இவ்விதம் புரட்சிகரமான மாறுதல் கொண்டதற்குக் காரணம் என்ன? என்பதை அறிந்து கொள்ள, நான் அவாவுடையவனுயிருக்கிறேன். ஏனென் முல், நேற்றுவரை என்னைக் கண்டாலே விஷத்தைப்போல் வெறுத்து ஒதுக்கிவந்த நீ, இன்று எல்லா வரம்புகளையும் தடைகளையும் மீறி வந்து கலியாணஞ் செய்துகொள்ள முன் வருகிருய் என்ருல், அதை என்னல் எளிதில் நம்ப முடியவில்லை. இவ்விதம் நீ எதிர்பாராத முடிவுக்கு வருவ தற்கு ஏதோ காரணம் இருக்கவேண்டும்? உன் மனம் இவ்வாறு விரக்தி கொள்ளும் படியாக், வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டதா? அல்லது தாய் தகப்பன ருடன் சண்டையா? ஏதோ கோபதாபத்தில் அவசரப்பட்டு * 2. ، فمجالسال التي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/113&oldid=1338529" இலிருந்து மீள்விக்கப்பட்டது