பக்கம்:தரங்கிணி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

ii.4

ஜோஸப். அவளுடைய மலர்க்கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். -

"ஊஉம்; இதெல்லாம் இப்போது கூடாது. கலியாணம் ஆனபின்...... ’ என்று மொழிந்தவாறு, தரங்கிணி, ஜோஸ்பின் பிடியிலிருந்து தன் கரங்களை மெல்ல விடு வித்துக்கொண்டு எழுந்து, செந்தோம் சர்ச்சை நோக்கி விரைந்து நடக்கலானள்.

"ஐயோ, பெண்ணேl:

ஜோஸ்பின் வாய் அனுதாபம் தெரிவித்தது. அவன் கண்கள், தரங்கிணி அன்னம்போல் அழகுநடை நடந்து செல்லும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தன.

தரங்கிணி, தன் சேலைத்தலைப்பால் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே போளுள்.

இச்சமயம், கடற்கரை நடைபாதையில் வரிசையாக இருந்த மெர்க்குரி விளக்குகள் பிரகாசிக்கலாயின.

Τ Ο

"அண்ணு! என்ன சமாச்சாரம்? இரண்டு நாளாக உன் சந்தடியைக் காணுேமே!...... 2 o' r காதரின் சிரி த்துக்கொண்டே கேட்டாள்.

துவைத்த துணிகளுக்குப் பெட்டி போட்டுக்கொண்

டிருந்த ஜோஸ்ப். ஏதோ யோசனையில் இருந்தானே. யொழிய, சகோதரியின் பேச்சைக் காதில் வாங்கவில்லை.

"சின்ன அன்ன! உன்னைத்தான்."

காதரீன், அவன் காதின் கிட்டப் போய்க் கிண்டலாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/115&oldid=1338531" இலிருந்து மீள்விக்கப்பட்டது