பக்கம்:தரங்கிணி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115

#15

'உம் தூக்கத்திலிருந்து திடீரென எழுந்து கேட் பவன் போல், சிலாக் சர்ட்டையும், பாண்ட்"டையும் 'இஸ்திரி செய்து கொண்டிருந்த ஜோஸப், தலையைத் தூக்கிக் கேட்டான்.

பிரமை பிடித்தவன்போல் தன் சகோதரன் காணப் படுவதைக் கண்டு, காதரீன் ஆச்சரியப்பட்டுப் போனள்.

"அண்ணு, ஏன் இப்படிப் பித்துப் பிடித்தவன்போல் இருக்கிருய்? ஆபீஸில் ஏதாயினும் தகராரு? அல்லது உடம்புக்கு ஏதேனும்?...... 黔歸

"ஊஹாம். அதெல்லாம் ஒன்றுமில்லை. நான் எப் போதும் போல்தானே இருக்கிறேன்.

குதிரை சிலிர்த்துக் கொள்ளுவதுபோல், அவன் தன் உடம்பைச் சிலிர்த்துக்கொண்டு, சகோதரிக்குப் பதில் சொல்ல முயன்ருன்.

காதரீன் இரக்கஉணர்ச்சியை வெளிப்படுத்தியவாறு, "ஏன் அண்ணு! மறைக்கிருய்? நான்தான் உன்னை இரண்டு நாளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேனே! எதிலும் நாட்ட மில்லாது சதா சிந்தனையிலேயே இருந்து கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை என்று நினைத்தாயா? எனக்கு எல்லாம் தெரியும். நீ ஏதோ உன் மனத்தில் வைத்துக் கொண்டு புழுங்கிக் கொண்டிருக்கிருய்? மற்றவர்கள். எதிரில் உன்னை ஒன்றுங் கேட்கக்கூடாது என்றுதான், அம்மா போகவிட்டுக் கேட்கிறேன்......... s:

ஜோஸப் தலை குனிந்து கொண்டான். காதரீன் அவன் முகத்தைப்பார்த்தவாறு, என்னிடம் சொல்லக்கூடாது என்று நீ எண்ணினல், சொல்ல வேண் டாம். ஆனால், உன்னை உலுப்பிக் கொண்டிருக்கும் விஷயத்தை யாரிடமாயினும் சொல்லி ஆற்றிக்கொள்வது. அல்லது பரிகாரம் தேடிக்கொள்ளுவது நல்லது என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/116&oldid=1338532" இலிருந்து மீள்விக்கப்பட்டது