பக்கம்:தரங்கிணி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

116

எனக்குத் தோன்றுகிறது. நான் உன்னிடம் தமாஷாகப் பேசத் தொடங்கியதற்குக் கூடக் காரணம், உன் கவனத்தை மாற்றுவதற்காகத்தான்.:

ஜோஸப் நிமிர்ந்தான். காதரீனைச் சில விநாடிகள் கண்கொட்டாமல் பார்த்தான். பின், 'காதரீன்! நீ குறிப்பிட்டதுபோல், என்னை வாட்டிக்கொண்டிருக்கும் விஷயத்தை, உன்னிடந்தான் சொல்லி ஆற்றிக்கொள்ள முடியும்; அதற்குப் பரிகாரமும் தேடமுடியும்; வேறு யாரிடமும் சொல்லமுடியாது; சொல்லவுங் கூடாது. ஆம்; தாய் தகப்பன், சகோதரனிடங் கூடத்தான்!”

காதரீன் முன்னேவிட வியப்புடன் சகோதரன் முகத்தை நோக்கினள்.

சில விநாடிகள் அங்கு அமைதி நிலவியது. இதனி டையே ஜோஸ்ப், இஸ்திரிப் பெட்டியையும் துணிகளையும் எடுத்துத் தன் அறையில் வைத்துவிட்டு வந்தான்.

உச்சிக்கு வர விரைந்துகொண்டிருந்த ஞாயிற்றை மேகக் கூட்டங்கள் விரட்டிக்கொண்டிருந்தன. வாசற் கொடியில் போட்டு உலரவைத்திருந்த துணிகள்மீது ஒரு காக்கை வந்து உட்கார்ந்ததைத் தற்செயலாகக் கவனித்து விட்ட ஜோஸப், தாழ்வாரத்தில் பம்பரம் ஆடிக்கொண்டி ருந்த டேவிட்டைக் கூப்பிட்டு, அதை ஒட்டச் சொன்னன். பின்னர், அவன் பின்கட்டுப் பக்கம் நோக்கிவிட்டுக் காதரீனிடம் வந்தான். -

காதரின் நீ தரங்கிணியைக் கடைசியாக எப்போது பார்த்தாய்? - - - - ‘. .

தன் சகோதரன் தரங்கிணியைப் பற்றிப் பேச்சு எடுப்பான் என்று. காதரீன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஆதல்ால், இது கேட்டுத் திடுக்கிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/117&oldid=1338533" இலிருந்து மீள்விக்கப்பட்டது