பக்கம்:தரங்கிணி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

117

"ஏன்? அவளைப்பற்றி என்ன? அவள் மூன்று நாட்க ளுக்கு முன்னர்தானே நம் வீட்டுக்கு வந்து போளுள்?

"அவளுக்குக் கலியாண முயற்சி ஏதாயினும் நடக் கிறதா? உனக்குத் தெரியுமா? அதுபற்றி உன்னிடம் அவள் ஏதேனும் சொன்னளா?”

'தரங்கிணியின் கலியான விஷயம் பற்றி உனக்கு என்ன சிரத்தை அண்ணு? நீ ஏன் அது குறித்துக் கேட்கிருய்?"

காதரீன் குரலில் கடுமை தொனித்தது. தன் தோழி யின் கலியாணம்பற்றித் தெரிந்துகொள்ளத் தன் சகோத ரன் அக்கறை காட்ட வேண்டிய அவசியமென்ன? அவன் அவ்விஷயம் பற்றிப் பேசுவதே உசிதமல்ல என்று அவள் கருதினுள்.

ஜோஸ்ப், தங்கையை இரக்கமாகப் பார்த்து, காத ரீன் கோபித்துக்கொள்ளாமல் நான் சொல்லுவதைக்கேள். அவசரப்பட்டு நான் பேசுவதில் தப்பபிப்ராயங் கொள் ளாதே. தரங்கிணியின் கலியாணத்தைப்பற்றி நான் கேட் பதற்கு, நியாயமான காரணமிருக்கிறதென்பதை மட்டும் நீ நம்பு.’

காதரீன், என்ன காரணம்? சொல், அண்ணு! என்று ஆவலோடு கேட்டாள். 'ஒரு பெண்ணின் கலியான தைப் பற்றிச் சம்பந்தமில்லாத வாலிபளுெருவன் கேட்பது உசிதமல்லவே என்ற எண்ணத்தால்தான், நீ தரங்கிணி யின் கலியாணம் குறித்துக் கேட்டதுமே ஆத்திரங் கொண் டேன்." -

"நீ கோபப்பட்டது நியாயமானே த! அதுவும் உன் சகோதரன் வரம்புமீறி ஒரு பெண்ணின் கலியான விஷயத் தில் தலையிடுகிருன் என்ருல், அவனைக் கண்டித்துத் திருத்த வேண்டியது உன் கடமைதான். அது அவசியமும்கூட."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/118&oldid=1338534" இலிருந்து மீள்விக்கப்பட்டது