பக்கம்:தரங்கிணி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

118

"அதிருக்கட்டும். நீ சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லு; அண்ணு!'

வெளிவாயிலையும் பின்கட்டையும் ஒருமுறை பார்த்து விட்டு, 'டேவிட், இங்கேயேதான் விளையாடிக் கொண்டிரு. யாராயினும் வந்தால் சொல்லு. அம்மா பின்னல் இருக் கிருர்; பார்த்துக்கொள்' என்று சொன்ன ஜோஸப் எழுந்து, "காதரீன்! என் அறைக்குள் வா! நாம் பேசும் விஷயம் அம்மா அப்பாவுக்குத் தெரியக்கூடாது...” என்று கூறிய வாறு, தங்கையை உள்ளே அழைத்துக் கொண்டு போனன்.

காதரீன் ஆவலுணர்ச்சியோடு ஜோஸப் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஜோஸப் அவளே அங்கிருந்த நாற்காலியொன்றில் உட்கார சொல்லிவிட்டுத் தான் கட்டிலின்மீது அமர்ந்தான்.

"தரங்கிணி தன் கலியான விஷயம்பற்றி உன்னிடம் பேசுவதில்லையா? காதரீன்!"

'ஏன் பேசாமல்? யாராரோ வந்து பார்த்துவிட்டுப் போவதாகச் சொல்லுவாள். ஆனல், இப்போதெல்லாம் அவள் என்னிடமோ வேறு சிநேகிதிகளிடமோ கலியாணத் தைப்பற்றிப் பேச்சே எடுப்பதில்லை. ஆறு மாதத்துக்கு மேல் இருக்கும்.” -

"அப்படியா? சமீபத்தில் அவளை வந்து யாரும் பார்த்த தாக உனக்குத் தகவல் தெரியுமா?" -

'என்ன அண்ணு துப்ப றியும் நிபுணரொருவர் புலன் அறிய விசாரணை நடத்துவதுபோல், நீ என்னை ஏதேதோ கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டாய்?"

"விளையாட்டுப் பேச்சுப்பேச இது சமயமல்ல; காத நின். தயவு செய்து நான் கேட்கும் கேள்விகளுக்கு உனக்குத் தெரிந்தவரையில் ப்தில் சொல். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/119&oldid=1338535" இலிருந்து மீள்விக்கப்பட்டது