பக்கம்:தரங்கிணி.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

dł

சென்ற தமிழ்ப் பேரறிஞர் கா. நமச்சிவாய முதலியார் வாழ்ந்து வந்த கடலகம்' போன்ற மாளிகைகள் இரண்' டொன்றுந் தான் குறிப்பிடத் தக்கனவாயிருந்தன. மற்றவையெல்லாம் பழங்காலத்திய தாழ்ந்த சிறு வீடுகளா கவே காணப்பட்டன. கிழக்கு வரிசையிலுள்ள பெரிய பங்களாக்களை யடுத்தாற்போலிருந்த செம்படவர் குடிசை கள், பங்களா வாசிகளான பணக்காரர்களைப் பார்த்துப் பரிகசிப்பதுபோல் இருந்தன. நம் சமுதாயம் எவ்விதம் ஏற்றத்தாழ்வாக அமைந்து இயங்கி வருகிறதோ, அவ் விதந்தான் அந்த இளம்பெண்களின் நிலையும் காணப் பட்டது; அப்பகுதியிலிருந்த கட்டிடங்களும் குடிசைகளும் காணப்பட்டன. ஒரே வார்த்தையில் சொல்வதானால், நம் சமுதாயத்தை அப்படியே பிரதிபலித்துக் காட்டுவது போலவே அவ்விளம் பெண்களும் விளங்கினர்; வீடுகளும் இருந்தன என்னல் வேண்டும். -

பூத்துவரும் புதிய சமுதாயம் இப்படித்தான் நிர்மல மாக, பேதமற்றதாக இருக்கும் என்று பறைசாற்றுவது போல், கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டு போகும் அவ்விளம் பெண்கள், நடந்தும், கார் முதலிய வாகனங் களில் ஏறியும் செல்லும் மக்களின் கவனங்களைக் கவர்ந் தனர். - "தரங்கிணி! எங்களையெல்லாம் கவனித்தாயா? இன்று பிற்பகலிலிருந்து நாங்கள் அனைவருமே ஒரு முழம் உயர்ந்து போயிருக்கிருேம்.”

ஒரு பெண்ணின் குரல் கணிரென்று ஒலித்தது. "அது எப்படியடி, கோகிலா? உங்கள் விஞ்ஞான ஆசிரியர் ஏதாயினும் ரசாயனப் பொருள்களைக் கொடுத்து உட்கொள்ளச் செய்து வளர்த் துவிட்டாரா? அல்லது : மந்திர தந்திரம் எதையேனும் சொல்லித் தந்து உங்களை உயரமடையச் செய்து விட்டாரா?” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/12&oldid=1338428" இலிருந்து மீள்விக்கப்பட்டது