பக்கம்:தரங்கிணி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

119

"சொல்லுகிறேன், அண்ணு' என்ற காதரீன், தரங் கிணியைச் சென்ற மாதத்தில்கூட யார் யாரோ வந்து பார்த்துவிட்டுப் போனர்களாம். ஆனல், முடிவுதான் ஒன்றும் இதுவரை ஏற்படவில்லையாம். இதுகூட இவள் சொல்லவில்லை. பாகீரதியும், சாரதாவும் தாங்கள் கேட் டறிந்ததை என்னிடம் வந்து சொல்லிய பிறகுதான், எனக்குத் தெரியும்.”

'இத்தனைபேர் வந்து பார்த்தும் ஏன் ஒரு முடிவும் ஏற்படவில்லை? பெண் பார்க்க வந்தவர்களில் ஒருவருக்குக் கூடவா தரங்கிணியைப் பிடிக்காமல் இருந்திருக்கும்? வந்து பார்த்தவர்களெல்லாம் குருடர்களாகவா இருந்தார்கள்?

காதரீன் புன்முறுவல் புரிந்து, "நன்முகச் சொன்னுய், அண்ணு! தரங்கிணியைக் கண்ணிருந்து பார்த்தவர்கள் எங்களுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்று சொல்லி யிருப்பார்களா? சொல்லத்தான் துணிவு இருந்திருக்குமா?.

பின்னே?கை

தரங்கிணியின் குடும்பம் ஏழ்மையாயிருப்பது ஒரு குற்றமாய்விட்டது. வருபவர்களெல்லாம், தாங்கள் எதிர் பார்க்கிற வரதட்சணையைப் பெண்ணின் தந்தையால் கொடுக்க முடியுமா? கலியாணத்தைச் சிறப்பாகச் செய் வார்களா? சீர்வரிசையைச் சரியாகச் செய்வார்களா? என்று சந்தேகிக்கிருர்களாம். தம்முடைய சக்திக்கு முடிந்த அளவு கடன் உடன்பட்டாயினும் கெளரவமாகச் செய்வோம் என்று, தரங்கிணியின் தந்தை எவ்வளவோ சொன்னலும் யாரும் நம்பமாட்டேன் என்கிருர்களாம்...'

'தரங்கிணியின் கலியாணம் தடைப்பட்டு வருவதற்கு

முக்கிய காரணம், பொருளாதாரப் பிரச்னைதான் என்று சொல்லு.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/120&oldid=1338536" இலிருந்து மீள்விக்கப்பட்டது