பக்கம்:தரங்கிணி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

120

"ஆமாம், பண விஷயம்தான் தரங்கிணியின் கலியான விஷயத்தில் பெரிய பிரச்சினையாக இருந்து வருவதாகத் தெரிகிறது, அண்ணு!’ :

ஜோஸப் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்.

காதரீன் தொடர்ந்து பேசிள்ை: சென்ற ஆவணி மாத முதலில் சிதம்பரத்திலிருந்து பிள்ளை வீட்டுக்காரர் சிலர் வந்து தரங்கிணியைப் பார்த்தார்களாம். பிள்ளையின் பெற்ருேர் உட்பட எல்லாருக்குமே பெண்ணை மிகவும் பிடித்துவிட்டதாம். மாப்பிள்ளே தரங்கிணியைக் கண்டு சொக்கிப் போய்விட்டாராம். அவளுடைய பாட்டைக் கேட்டு அவர் சபாஷ்கூடப் போட்டாராம்...”

ஜோஸப் முகத்தில் முறுவல் தோன்றி மறைந்தது.

    • ջ լի. **

"ஆல்ை...?”

'ஆனல் என்ன?"

காதரின், பிள்ளையின் தந்தைபிள்ளையின் படிப்பைப் பற்றியும் உத்தியோகத்தை பற்றியும் பிரமாதமாகச் சொல்லித் தங்கள் குடும்ப அந்தஸ்துக்கும் பிள்ளையின் தகுதிக்கும் ஏற்ருற்போல், கலியாணம் முதலியவைகளைச் செய்யமுடியுமா என்று கேட்டாராம். தரங்கிணியின் தகப் பனர், தம்மால் முடிந்த அளவு கெளரவமாகச் செய்வதாக வும், ஏறத்தாழ இருந்தாலும் பெரிய மனது பண்ணி ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் விநயமாகக் கேட்டுக் கொண்டாராம். இப்படிச் சொன்னதுமே, அந்தக் கல் நெஞ்சம் படைத்த மனுஷன், சடக்கென எழுந்து, சொல் லாமல் கொள்ளாமல்,தன்னுடன் வந்தவர்களோடு கிளம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/121&oldid=1338537" இலிருந்து மீள்விக்கப்பட்டது