பக்கம்:தரங்கிணி.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

122

வேலையாயிருக்கிருன் என்று சொன்னய்?" என்று கேட் டான்.

"நீ வேலை பார்க்கும் ஸ்டேட் பாங்கில்தான். ஹெட் அக்கவுண்டண்டாம்.”

“எத்தனையோ பிராஞ்ச் இருக்கிறதே! எதில் வேலையா யிருக்கிருனே? ஆனால், ஸ்டேட் பாங்கில் அவன் ஹெட் அக்கவுண்டண்டாயிருக்க்முடியாது. ஏனென்ருல், எடுத்த வுடனே யாருக்கும் அந்த வேலை தரமாட்டார்கள்.”

"எம்.காம்மாமே? அதுவும், பெரிய இடத்துச் சிபார்சாம்!' -

"எம்.காம்மா? நம்ம பாங்கில் மூன்று மாதத்துக்குமுன் ஒருவன் நியமிக்கப்பட்டானே! அவனுயிருக்குமோ? தனக்குத் தானே கேட்டுக்கொண்ட ஜோஸப், பின் காதரீனைப் பார்த்து, "ஓ! அப்படியா? அவன் எந்தப் பிராஞ்சில் இருக்கிருன் என உனக்குத் தெரியுமா?"

"எனக்கு எப்படித் தெரியும்? பாகீரதியைக் கேட்டுச் சொல்லுகிறேன். அவள் குடும்பத்துக்கு, அவர்கள் உற வாம்......... ; 3

"அவள் பிள்ளையின் பெயரைச் சொல்லியிருப்பாளே!' "செளந்தரராஜன் என்று சொன்ள்ை." * ஜோஸப் துள்ளிக் குதித்தான். "செளந்தரராஜன? அப்படி ஒருவன் நான் வேலை செய்யும் எஸ்பிளனேட் பிராஞ்சில்தான் வந்து சேர்ந்திருக்கிருன். ஆள் வாட்டஞ் சாட்டமாய் ராஜபார்ட் ஆசாமி மாதிரியிருப்பான். நல்ல சுபாவம். சரளமாக எல்லோருடனும் பேசுவான். தான் பெரிய பட்டதாரி, பெரிய உத்தியோகத்திலிருக்கிருேம் என்ற கர்வம் அவனிடம் கிஞ்சித்தும் கிடையாது. தரங் கிணியைப் பார்த்து விரும்பங்கொண்டவன் அவனுயிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/123&oldid=1338539" இலிருந்து மீள்விக்கப்பட்டது