பக்கம்:தரங்கிணி.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125

* † - மாலே மஞ்சள் வெய்யில் நீளமாகப் படர்ந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோட்டைப் பாரீஸ் கார்னர் வரை அழகுபடுத்திக் கொண்டிருந்தது. பூக்க.ை போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரிலுள்ள நடைபாதையில், மக்கள் கூட்டம் தேர்த்திருவிழாபோல் குறுக்கும்.நெடுக்கும் போய் வந்துகொண்டிருந்தது. நடைபாதையோரத்தில் விரிக்கப் பட்டிருந்த "ஆக்கர் கடைகளும், சாமான்களைக் கூவி விற்கும் ஆட்களும், பொதுமக்களின் நடமாட்டத்துக்கு இடைஞ்சலாயிருந்தனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத் துவதற்கென்று இருக்கும் போலீஸ் கான்ஸ்டேபிள்கள் அப் பக்கம் வருகையில் பல்லேக் காட்டியும், மாமூல் தண்ட வரும் ஆளிடம் சில்லரை தந்தும், துணிமணி மற்றுஞ் சாமான்கள் விற்போர் அச்சம் சிறிதுமின்றித் தங்கள் வியாபாரத்தை நடத்திக் கொண்டிருந்தனர்; சப்இன்ஸ் பெக்டர் அல்லது சார்ஜென்ட் யாராயினும் வருகையில் தான், அவர்கள் சாமான்களைச் சுருட்டிக்கொண்டு சந்து களில் பதுங்கலாயினர். கையில் நப்தலீன் பால், ரிப்பன், சேப்டி பின், பேணு, பூட்டு, கைக்குட்டை, பனியன்கள் முதலியவைகளை வைத்துக்கொண்டு விற்கும் பையன்களும் வாலிபர்களும், சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டு, நடைபாதையின் ஒரத்தில் ஒதுங்கி நின்றனர். இவ்வளவு கெடுபிடியிலும், ஜனநெரிசலிலும், அலுவலகங்களிலிருந்து அவ்வழியாக வரும் அதிகாரிகள், அலுவலர்கள் பலர், அங் குள்ள பிள்ளையாருக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு, அர்ச்ச கரிடம் திருநீறு வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு செல்லலாயினர். இளைஞர்களும் சிறிது வயதானவர்களுங் கூடச் சபலத்தால், கூட்டத்தில் எதிர்ப்படும் மங்கையரை -முக்கியமாக அலுவலகங்களில் இருந்துவரும் இளம் பெண்களை-இடித்துக்கொண்டு செல்லலாயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/126&oldid=1338542" இலிருந்து மீள்விக்கப்பட்டது