பக்கம்:தரங்கிணி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127

i87

பார்த்து நின்றுகொண்டிருந்தானே, அவரே தன் எதிரே வந்து நின்று, இவ்விதம் தன்னை நோக்கிக் கேட்பதைக் கண்டதும், வியப்பும் மகிழ்ச்சியும் ஒருங்கே கொண்டான். இத் திகைப்பில், அவனல் உடனே பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. - -

வந்தவர், நடைபாதையில் அடியெடுத்து வைத்த வாறே, "நான் கேட்ட கேள்வி உன்னைச் சங்கடத்தில் ஆழ்த்திவிட்டதா? நீ யாரோ நண்பரை எதிர்பார்த்து நின்றிருப்பாய். நான் அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்டு...” -

'என்ன சார், அப்படிச் சொல்லுகிறீர்கள்? நான் வேறு யாருக்காகவும்...'

ஜோஸப் சொல்ல வந்ததை முடிப்பதற்குள், 'யாருக் காகாவா எதிர்பார்த்துக் காத்திருப்பதில், என்னப்பா தப்பு? வயது ஒன்று இருக்கிறதோ, இல்லையோ? சாயங் காலத்தில் ஜாலியாக..." என்று குறுக்கிட்டுப்பேசியவர், "சரி, சரி; நான் போய் வருகிறேன், ஜோஸப்' -

இவ்விதம் சொல்லிவிட்டு அவர் நடக்கலானர். "சார், சார் நான் உங்களைத்தான் சார் எதிர்பார்த் துக்கொண்டிருந்தேன்' என்று கூறிக்கொண்டே, அவர் பின்னே சைக்கிளைத் தள்ளிக்கொண்டு போன ஜோஸ்ப், "நீங்கள் என்னவோ தவருக எண்ணிக்கொண்டு ஏதோ சொல்லுகிறீர்கள், சார்! நான் அடிப்பட்டவன் இல்லை, சார் வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டுப் பேசினன். அவர் திரும்பி அவனைப் பார்த்து, 'நீ யாரோ பெண்ணை அல்லது உன் காதலியை எதிர்பார்த்துக்கொண் டிருக்கிருய் என்ரு சொன்னேன்? இப்படிப் பதறுகிருயே! அப்படியிருந்தால்கூட, அதெல்லாம் தவருென்றும் இல்லை, ஜோஸப் இந்தக் காலத்தில் இதெல்லாம் சர்வ சகஜ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/128&oldid=1338544" இலிருந்து மீள்விக்கப்பட்டது