பக்கம்:தரங்கிணி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

138

என்றவர், "ஆமாம். என்னை எதிர்பார்த்துத்தான் நின்றி ருப்பதாகச் சொன்னயே! என்ன சமாசாரம்? ஆபீஸ் விஷயமா? யாராயினும் ஏதாயினும்...?

'ஆபீஸ் விஷயம் ஒன்றுமில்லை, சார்;...' என்ற ஜோஸ்ப், நீங்க பஸ்ஸுக்குத்தானே போகிறீர்கள்? இப்ப டிப் போகிறீரிகளே!”

"இந்தப் பஸ் ஸ்டாப்பில் இடங் கிடைப்பது கஷ்டம், அப்பா ரொம்ட நேரம் ஆகும்? பல பஸ்களைப் போக விட்டுக் காத்திருக்கணும்... அதுகூடக் கும்பலில் முண்டி யடித்துக்கொண்டு ஏறினல்தான் இடங் சிடைக்கும். ஒருவரையொருவர் மோதிக்கொண்டு ஏறுவது எனக்குச் சிறிதும் பிடிப்பதில்லை. அதனுல் நான் பாரீஸ் கார்னருகே போய்விடுவது வழக்கம். டெர்மினசுக்கே போய்விட்டால், ராஜா மாதிரி உட்கார்ந்துகொண்டு போகலாம் இல்லையா?..." -

தம் பின்னேவரும் ஜோஸப்பைத் திரும்பி பார்த்துச் சொல்லிக்கொண்டே வந்தவர். கடைசி வார்த்தையைக் சொல்லுகையில் சிரித்தார். -

ராஜா மாதிரி, என்ன சார்? நீங்கள் ராஜாவேதான்!

அதுவும் சாதாரண ராஜாவா? செளந்தரராஜா அடடா! உங்கள் பெயரைச் சொல்லி விட்டேனே! மன்னிச்சுக்குங்க, சார்!’ என்ற ஜோஸ்ப், "சிரித்த முகத்தோடு உங்களைப் பார்க்கும்போது, எனக்கு எவ்வளவு சந்தோஷமாயிருக் கிறது, தெரியுமா? சார்! என்ருன். -

ஆம்; வந்தவர் செளந்தரராஜன், அவன் வேலை பார்க்கும் பாங்கின் ஹெட் அக்கவுண்டண்ட். அவன் நின்று. ஜோஸ்பை ஒருவிதமாக நோக்கி, நான் சதா சிடு முஞ்சியாயிருக்கிறேன் என்று தானே சொல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/129&oldid=1338545" இலிருந்து மீள்விக்கப்பட்டது