பக்கம்:தரங்கிணி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

12

கடல் அலைக்ளைத் தம்புராச் சுருதிபோற் கொண்டு வானம்பாடிப் பறவையொன்று இன்னிசை மிழற்றியது போலிருந்தது. ஆம்; தரங்கிணிதான் பேசிள்ை.

- அதெல்லாம் இல்லை. நீதான் உன் பாட்டால் எங்களை வளரச் செய்து விட்டாய் என்ருள் பாகீரதி.

'பாவம்! சயன்ஸ் வாத்தியார் மீது ஏண்டி பழியைப் போடுகிருய், நீ செய்வதைச் செய்துவிட்டு? காதரீன் கிண்டல் செய்தாள்.

"பாட்டுப் பாடிப் பயிரை வளர்க்கலாம்; நாதசுரம் வாசித்து, சங்கீதக் கச்சேரி செய்து, செடி கொடிகளே, நெற்பயிர்களை வளர்க்கலாம் என்று, எங்கோ ஒரு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக் கிரு.ர்களாமே! அதுபோல், தரங்கிணி தன் கோகில கானத்தால் கச்சேரி செய்து, நம்மையெல்லாம் நெடுமரம் போல வளர்த்துவிட்டாள் என்று சொல்லு. அண்ணுமலை யூனிவர்ஸிடி செய்து வரும் தாவர வளர்ச்சி சங்கீத ஆராய்ச்சியை முதன்முதலாகப் பரீட்சைசெய்து பார்த்து, இது உண்மைதான் என்று காட்டிய பெருமை, நம்ம தரங்கிணிக்குத்தான் கிடைக்கப் போகிறது?”

இவ்விதம் சாரதா சொன்னுள். தரங்கிணியின் மாம்பழக் கன்னங்களில் குழி விழுந்தது. ஆமாம்; அவள் சிரித்தாள். சிரித்துக் கொண்டே கேட்டாள்:

என்னடி, எல்லாருஞ் சேர்ந்துகொண்டு, ஏதோ புதிர் போட்டுப் பேசுகிறீர்கள்?"

சிறிது முன்னே நடந்து கொண்டிருந்த காதரீன், தரங்கிணியிடம் நெருங்கி வந்து, "நாங்கள் புதிரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/13&oldid=1338429" இலிருந்து மீள்விக்கப்பட்டது