பக்கம்:தரங்கிணி.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

129

சொல்லுகிருய், இல்லையா? ஜோஸப்'...என்று புன்னகை யுடன் வினவினன்.

"ஐயையோ! நான் அப்படிச் சொல்லவில்லை, சார்! உங்களைப்போல் கலகலப்பாக நம்ம பாங்கில் வேறு யார் சார் இருக்கிரு.ர்கள்? நீங்கள் வகித்துவரும் உத்தியோக தோரணையை விட்டுவிட்டுக்கூட, வித்தியாசங்காட்டாமல் எல்லோருடனும் சரளமாகப் பேசி பழகுகிறீர்களே! அதைப் பார்த்து நாங்கள் எல்லாரும் பாராட்டிப் பேசிக் கொள்ளு வோமே! அப்படிப்பட்ட உங்கள் முகத்தில், சில சமயங் களில் சோகங் கப்பிக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போதுதான், எனக்கு மனசு துடிதுடித்துப் போகும் சார், என்ன கவலையோ? துன்பமோ? என்று. நீங்கள் உற்சாக மில்லாமல் சோர்ந்துபோய் உட்கார்ந்து, சிந்தனையில் ஆழ்ந் திருப்பதை, நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன், சார்...!" ஜோஸப் இரக்கத்தோடு பேசிக்கொண்டே போனன். செளந்தரராஜன் திரும்பிப் பார்க்கவில்லை. மெளன மாக நடந்து கொண்டிருந்தான்.

அவன் பேசாமல் போவது, ஜோஸபுக்கு அச்ச த்தை யுண்டு பண்ணியது.

"நான் ஏதாயினும் தப்பாகப் பேசி விட்டேர் சான, வரம்பு மீறி உங்கள் விஷயத்தில்...'

"சே! சே! அதெல்லாம் ஒன்றுமில்லை' இச்சமயத்தில் உயர்நீதிமன்றக் கட்டிடத்தைக் கடக் கும் நெடும் பாதை குறுக்கிட்டது.

டிராபிக் போலீஸ்காரன் கார்கள், மற்றும் வண்டிகள் போகக் கைகாட்டி நின்றதால், இவர்கள் நிற்க வேண்டிய தாயிற்று.

'ஜோஸப், நீ இந்தப் பக்கந்தானே போகனும்? போய் வருகிருயா?": . . . .

استادی این

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/130&oldid=1338546" இலிருந்து மீள்விக்கப்பட்டது