பக்கம்:தரங்கிணி.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

13t)

செளந்தரராஜன் ஜோஸ்புக்கு விடை கொடுத்து அனுப்ப முயன்ருன்.

'இல்லை, சார்! நான் உங்களைப் பஸ் ஏற்றிவிட்டுப் போகிறேன். நான் பீச் ரோடாகப் போவது வழக்கம். அதுதான் எனக்குச் செளகரியம்..." t

இதற்குள், கான்ஸ்டேபிள் ஆட்கள் போக, "ரைட்" கொடுத்துவிட்டான். ஆகையால், இருவரும் பாதையைக் கடந்து, உயர்நீதி மன்றத்தையொட்டிய நடைபாதைமீது நடக்கலாயினர்.

"நீ சொல்லுகிறபடி, பீச் ரோட்டில் போகிறதென்முல் கூட, இந்தப் பக்கம் பாலத்தின்மீது போய், தெற்குக் கோட்டை வாசல் பக்கம War Memorial ஸ்தூபி வழியாகச் செல்வதுதான் செளகரியம். பாரீஸ் கார்னர் திரும்பினல், மின்சார ரயில் போவதற்காக அடிக்கடி சாத்தி வைக்கும் ரயில்கேட் அல்லவா உன்னைத் தடுத்து நிற்கவைக்கும்.'

செளந்தரராஜன் இவ்விதஞ் சொல்வதைக் கேட்டு, ஜோஸப் அசட்டுச் சிரிப்புச் சிரித்தவாறு, தலைகுனிந்து கொண்டான். く

- 'எனக்காக அவ்வளவு தூரம் வரவேண்டாம் என்று

தான் சொல்லுகிறேன். நான் போய்விடுவேன்."

"பரவாயில்லை, சார்!’ செளந்தரராஜன் அதற்குமேல் ஒன்றுஞ்சொல்லவில்லை. சில விநாடிகள் இருவரிடையிலும் மெளனம் நிலவ லாயிற்று. ஜோஸப் அதை நீடிக்க விரும்பவில்லை.

"எப்போ, சார்? எங்களுக்கெல்லாம் கலியாணச் சாப்பாடு போடப் போகிறீர்கள்?...

இருந்தாற்போலிருந்து ஜோஸப் மெல்லக் கலியாணப் பேச்சை எடுத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/131&oldid=1338547" இலிருந்து மீள்விக்கப்பட்டது