பக்கம்:தரங்கிணி.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131

131

செளந்தரராஜன் சடக்கெனத் திரும்பி, அவனே விநோதமாகப் பார்த்தான். .

"என்ன? கலியானமா? எனக்கா?' என வியப்பொலி எழுப்பியபடி வினவிய செளந்தரராஜன், "கட்டையோடு கைலாசந்தான்; எனக்கு ஏது அப்பா கலியாணம்?' என விரக்தியோடு சொல்லி முடித்தான். - "என்ன சார்! அப்படிச் சொல்லுகிறீர்கள்? ஏன் இப்படி விரக்தி மனேபாவத்தோடு பேசுகிறீர்கள்? ஒரு வேளை காதலில் ஏமாற்றமா? அல்லது தோல்வியா? நீங்கள் விரும்பிய பெண்ணைக் கலியாணஞ் செய்துவைக்க உங்கள் பெற்ருேர் மறுத்துவிட்டார்களா?”

செளந்தரராஜன் உடனே ஒன்றும் பதில் சொல்ல வில்லை.

"சார்! நான் உங்கள் சொந்த விஷயத்தில் தலையிடுவ தாக எண்ணக்கூடாது. என்னை உங்கள் உடன்பிறந்த சகோதரன்போல் நினைத்துக் கொள்ளுங்கள். என்னையறியா மல், உங்களிடம் என்னமோ எனக்குப் பற்றும் பாசமும் உண்டாயிருக்கு நீங்கள் நன்ருக வாழ்வதை-எப்போதும் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கு..."

"என்மீது இவ்வளவு அன்பு காட்டும் உனக்கு என் நன்றி ஜோஸப்! என்ற செளந்தரராஜன், "உனக்குக் கலியாணமாய் விட்டதா?" w

"இல்லை சார். இதற்குள் எனக்கு என்ன சார் கலியாணம்? நான் உயரமாயிருக்கிறேன் என்று பார்க் கிறீர்களா? வயது இருபத்து மூன்றுதான் ஆகிறது."

'இருபத்து மூன்று வயதில் கலியாணஞ் செய்துகொண் டிருக்கக் கூடாதா, என்ன? 16,17-வதிலேயே சிலருக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/132&oldid=1338548" இலிருந்து மீள்விக்கப்பட்டது