பக்கம்:தரங்கிணி.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

133

கலியாணமாகி விடுகிறதே? என்னைவிட மூன்று வயதுதான் உனக்குக் குறைவு.................. 2 3 - "இவ்வளவு வயதாகியும் நீங்கள் ஏன் சார், இன்னும் கலியாணஞ் செய்துகொள்ளாமலிருக்கிறீர்கள்?"

"இப்போதுதானே உத்தியோகங் கிடைத்திருக்கிறது? "உத்தியோக வருவாயை எதிர்பார்த்து நடக்குங் குடும்பமில்லையாமே! உங்கள் குடும்பம் வசதியான குடும்ப மென்று சொல்லிக் கொள்ளுகிருர்களே!”

"என்னைப்பற்றி நீ ரொம்பத் தெரிந்து வைத்திருக் கிருயே?"

ஜோஸப் சிரித்துக் கொண்டான்.

"உங்கள் கலியான விஷயத்தில் ஏதாயினும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதா? அதனால்தான் கலியாணம் நடப்பது தடைப்பட்டிருக்கிறதா? நான் தெரிந்துகொள்ளலாமா gefrij P” •

செளந்தரராஜன் சிந்தனையோடு, "என்பால் இவ்வளவு பாசங்காட்டும் நீ, என் முன் நிற்கும் கலியாணப் பிரச்னை யைப் பற்றித் தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். நீ சிறிதுமுன் கேட்டாயல்லவா, எனக்கு காதலில் ஏமாற்ற மேற்பட்டிருக்கிறதா? அல்லது தோல்வியேற்பட்டிருக் கிறதா? என்று. இது ஒருவகையில் ஏமாற்றமென்றுதான் சொல்லவேண்டும்; தோல்வியல்ல. நான் பார்த்து விரும்பிய பெண் எனக்குக் கிடைத்துவிடுவாள் என்று எதிர்பார்த் தேன். ஆனால், தந்தையாரின் பணஆசையால் எதிர்பார்த் தது எட்டாமல் போய்விட்டது. ஆகவே, இது ஏமாற்றந் தானே!...” - "ஓ! அப்படியா? உங்கள் கலியாணத்துக்குத் தடை யாகப் பணந்தான் முன் நிற்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/133&oldid=1338549" இலிருந்து மீள்விக்கப்பட்டது