பக்கம்:தரங்கிணி.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

133

செளந்தரராஜன், தான் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றதும், சிதம்பரத்தி லிருந்து சென்னை நகருக்கு பெற்ருேருடன் வந்து, தரகர் காட்டிய தரங்கிணியைப் பார்த்ததும், அவளுடைய அடக்க வொடுக்கமும் அழகும் இனிய குரலும் இசை ஞானமும் தன்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டதும், தகப்பனர் பெண் விட்டாரின் ஏழ்மை நிலைமையையறிந்து, அவளை மருமக ளாக்கிக்கொள்ள மறுத்து விட்டதும் ஆகியவற்றை, ஜோஸபுக்கு விவரமாகச் சொன்னன்.

ஜோஸப்! நான் பார்த்த பெண் இருக்கிருளே, அவளைப்போல் லட்சத்தில்-ஏன் கோடியில் ஒருத்தியைத் தான் பார்க்கமுடியும். சாதாரணமாக வருணிக்கமுடியாத பேரழகி. சாமுத்திரிகா லக்ஷணம் முழுதும் பொருந்திய பெண்ணரசி. அவள் தன் செவ்விதழைத் திறந்து பாடினுல் குயில் கொஞ்சுவதுபோல் இருக்கும். குணத்திலோ தங்கக் கம்பி என்று சொல்லுகிருர்கள், யாரைக் கேட்டாலும். ஏழை வாத்தியார் ஒருவருக்கு மகளாகப் பிறந்துவிட்டது தான் குற்றமே தவிர, அவளைப்பற்றி வேறு எந்தக் குறை யையும் சொலல முடியாது என்கிருர்கள். நானும் எத்த னையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். எங்கள் குடும்பத் திலும் சரி, உறவினர்களிலும் சரி, வெளியிடங்களிலும் சரி, அந்தப் பெண்ணைப்போல் நான் இதுவரை பார்த்ததில்லை. இனிமேலும் பார்ப்பேன என்பது சந்தேகமே எங்கள் வீட்டில் உள்ள பெண்கள், என்னுடன் பிறந்த சகோதரி கள் எல்லோருமே சொர்ணவிக்கிரகம் போல்தான் இருப் பார்கள். ஆனாலும், அவளைப் பார்த்த பின்னர்... வாய் நிரம்ப வருணித்துக்கொண்டே போனன்.

தரங்கிணியைப் பற்றிச் செளந்தரராஜன் வருணித்துப் பேசப்பேச, ஜோஸபுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/134&oldid=1338550" இலிருந்து மீள்விக்கப்பட்டது