பக்கம்:தரங்கிணி.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

134

"தான் திட்டமிட்டிருக்கிறபடி செளந்தரராஜனைத் தன் விருப்பம்போல் நடக்கச் செய்துவிடலாம்; தான் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி நிச்சயம் வெற்றி பெறும் என்று அவன் தீர்மானித்தான்.

செளந்தரராஜன் மேலும் தொடர்ந்து பேசலானன். ஜோஸப் வெட்கத்தைவிட்டு உன்னிடஞ் சொல்கிறேன். அந்த மயிலாப்பூர் பெண்ணைப் பார்க்கிறவரை, பொதுவா கவே, பெண்களைக் குறித்து எனக்கு எவ்வித அபிப்ராயமுங் கிடையாது. கல்லூரி மாணவர்கள்-அதிலும் அண்ணுமலை யூனிவர்ஸிடி போன்ற கல்லூரிகளில் படித்தவர்கள் பலர் Romance செய்வதில் பேர்பெற்றவர்கள் என்று சொல்ல நீ கேள்விப்பட்டிருப்பாய். அங்குள்ள பல மாணவ மாணவிக்ள் தங்களை ரோமியோ ஜூலியட்டு'களாக நினைத்துக்கொண் டிருக்கிருர்கள். என்னுடன் படித்து வந்த மாணவர்கள்பழகும் நண்பர்கள் காதல் கீதல் என்று பேசில்ை, எனக்குக் பிடிக்காது. ஆண் பெண் காதல் என்பதையும், நான் மிக மோசமான சங்கதி, மகா கேவலமான விஷயம் என்று கருதிக் கொண்டிருந்தேன். பெண்களைக் கண்டாலே கண்ணை மூடிக்கொண்டு காததுரம் ஓடிவிடுவேன். எங்கள் வீட்டுப் பெண்ணைத் தவிர, வேறெந்த மங்கையரையும் நான் ஏறெடுத்துப் பார்த்தது கிடையாது. இவ்விதமான என் விசித்திர இயல்பைத் தெரிந்த, என் சக மாணவர் களும் நண்பர்களும் என்னைக் கலைகோட்டு மாமுனிவர் என்று பெயரிட்டுக் கேலியாக அழைப்பார்கள். சுகப் பிரம்மம்' என்றும் சிலர் குறும்பாகக் கூப்பிடுவார்கள். இப்படி இருந்தவனே, அந்த மயிலாப்பூர் மேனகை எப்ப டியோ மயக்கிவிட்டாள். அவளிடம் என்ன வசிய சக்தி இருக்கிறதோ தெரியவில்லை! அவளைப் பார்த்ததிலிருந்து நான் பித்துப்பிடித்தவனப் விட்டேன். சீதள சந்திர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/135&oldid=1338551" இலிருந்து மீள்விக்கப்பட்டது