பக்கம்:தரங்கிணி.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

五张5

கிரணங்களால் செய்யப்பட்டது போன்ற அவருடைய ஒளி மிகுந்த அழகிய முகம், என் நெஞ்சை-நினைவை விட்டு அகலவில்லை. தேவாமிர்த்தத்தால் ஆக்கப்பட்டது போன்ற அவளுடைய தீங்குரலிலிருந்து எழுந்த இன்னிசையொலி, இன்னமும் என் செவிகளில் இனிமையாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...'

'பலே! பலே! ஒரு பெரிய கவிஞனல்கூட இப்படி ஒரு பெண்ணைச் சிறப்பித்துப் பேசமுடியாது, சார்! அந்த அழகு சுந்தரியால் நீங்கள் ஒரு முதல்தரமான கவிஞராகவே ஆகி விட்டீர்கள் என நினைக்கிறேன்.”

ஜோஸப் சபாஷ் போட்டுப் பேசினன்.

செளந்தரராஜன், தரங்கிணியின் இனியநினைவிலேயே மிதந்தவாறு, தன் மன உணர்ச்சியைக் கொட்டிக் கொண் டிருந்ததால், ஜோஸப்பின் பாராட்டு மொழிகளைச் செவி களில் வாங்கவில்லை.

'இப்பேர்ப்பட்ட அற்புதமான பெண்மணியைத்தான் வேண்டாம் என்கின்றனர் என் பெற்றேர்கள், எதிர்பார்க் கும் பணம், சீர் சிறப்புகள் அவள் வாயிலாகக் கிடைக்காது என்ற எண்ணத்தால். ரதியினும் மேலான அவளைப் புறக் கணித்துவிட்டு, வேறு எங்கெங்கோ போய்க் குரங்குகளையும் கோட்டான்களையும் பார்த்து வருகின்றனர். ஆனால், நான் அவர்களுக்குப் படித்துப் படித்துச் சொல்லிவிட்டேன். எனக்குக் கலியாணஞ் செய்வதென்ருல், மயிலாப்பூர் பெண்ணைக் கட்டுங்கள். பணத்தைப் பற்றியோ மற்ற விஷயங்களைப் பற்றியோ கவனிக்காதீர்கள். எனக்கு ஒன்றுமே வேண்டாம். அவளே எனக்குக் கலியாணஞ் செய்துவைக்க உங்களுக்குச் சம்மதமில்லையென்ருல், நான் இப்படியே பிரம்மச்சாரியாகவே இருந்துவிடுகிறேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/136&oldid=1338552" இலிருந்து மீள்விக்கப்பட்டது