பக்கம்:தரங்கிணி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

137

'இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும். ஜோஸப்? இதையெல்லாம்கூட, அந்தப் பாகீரதிப்பெண் வாயிலாகத் தான் கேள்விப்பட்டாயா?

செளந்தரராஜன், ஆவலுணர்ச்சி ததும்பக் கேட்டான். 'இல்லை. சார்! பெண் வீட்டு விஷயம் எங்களுக்கு நேரிடையாகவே தெரியும். -

"எப்படி: "அவர்கள் வீடும் எங்கள் இல்லமும் அடுத்தடுத்துத் தான் இருக்கின்றன...!

"ஓ! நீ இருந்துவருவது மயிலாப்பூர் அல்லவா! நான் அதை அடியோடு மறந்துவிட்டேன்."

"அதுமட்டுமல்ல, சார்! தரங்கிணியும் என் தங்கையும் பாகீரதியும் ஒரே பள்ளியில் படித்து வந்த சக மாணவி கள்..." .

"அப்படிச் சொல்லு. அதனுல்தான், அந்தப் பெண் கலியான விஷயம் பற்றியெல்லாம், உனக்கு அவ்வளவு நன்ருகத் தெரிந்திருக்கிறது. அத்துடன், என் விஷயத்தை யும் தெரிந்து வைத்திருக்கிருய். இவ்வளவையும் தெரிந்து. கொண்டு, ஒன்றுமே தெரியாதவன்போல், என் கலியாணத் தைப்பற்றி விசாரிக்கத் தொடங்கினயே! நீ பலே ஆள், அப்பா!' х

செளந்தரராஜன், ஜோஸப் முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்தான். • ,

இவர்கள், இப்படிப் பேசிக்கொண்டே மாம்பலம் பஸ் ஸ்டாண்டண்டை வந்துவிட்டனர்.ஆனல்செளந்தரராஜன் அங்குள்ள "க்யூ வரிசையில் போய் நிற்காமல், சிறிது தள்ளி ஆள் நடமாட்டம் இல்லாத இடமாகப் பார்த்துப் போய் நின்றன். ஜோஸபும் சைக்கிளுடன் அவன் பின்னல் போனன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/138&oldid=1338554" இலிருந்து மீள்விக்கப்பட்டது