பக்கம்:தரங்கிணி.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138

சூரியன் மேற்றிசையில் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தான். மைசூர் பாங்க் கட்டிடக் கடியாரம், ஐந்தே முக்கால் ஆயிற்று என மணி காட்டிக் கொண் டிருந்தது.

செளந்தரராஜன் ஏதோ சிந்தனை செய்துகொண்டி ருந்ததை, அவன் நெற்றியில் ஏற்பட்ட வரிக்கோடுகள் தெரிவித்தன. இதற்குள், தன் சைக்கிளை மதில் ஒரத்தில் சாத்திவிட்டு வந்த ஜோஸ்ப், அவன் மெளனத்தைக் கலைக்க முயன்றன்.

'தரங்கிணியின் தந்தையிருக்கிருரே, சார்!அவர் தங்க மான மனிதர். தாயாரும் மகா புண்ணியவதி. அதனல் தான், அவர்கள் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் மணிமணி யாக இருக்கின்றனர்" என்று பாராட்டிப் பேசத் தொடங்கிய அவன், பெண்ணின் பெயர் தரங்கிணி என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனல்; அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனக் கேட்

Lff"Gðs“,

'தரங்கிணி! எவ்வளவு இனிமையான பெயர் , அது ஒரு அபூர்வ ராகத்தின் பெயர் அப்பா! தரங்கிணி என்னும் போதே இன்னிசையின் அலையோசை கேட்குமே! அப் பேர்ப்பட்ட பெயரை நான் மறக்கமுடியுமா? அதுவும், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டவள் திருப் பெயரையா? நன்ருகக் கேட்டாய்! போ.”

செளந் தரராஜன் நெஞ்சநெகிழ்ச்சியுடன் சொன்னன்.

"சார் பரமசிவவா த்தியாரின் பரிதவிப்பையும்பரிதாப நிலையையும் நீங்கள் நேரில் பார்த்தால், உள்ளம் உருகிப் போவீர்கள் சார்! அவரைப் பார்க்கவே பாவமாயிருக்கு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/139&oldid=1338555" இலிருந்து மீள்விக்கப்பட்டது