பக்கம்:தரங்கிணி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13

போடவில்லை; வெறும் புகழ்ச்சியுமில்லை. நான் நிசமாகச் சொல்லுகிறேன். இன்று நம் பள்ளியில் நடந்த விழாவில், பாரதி பாடல் போட்டியில் நீ முதலாவதாக வெற்றிபெற்ற தாகத் தெரிவித்து, உனக்குப் பரிசளித்துப் பாராட்டிய தைக் கேட்டு, நாங்களெல்லாம் எவ்வளவு பூரித்துப் போளுேம் தெரியுமா? அப் பூரிப்பில் நாங்கள் ஒரு சுற்றுப் பெருத்துவிட்டோம் என்று சொல்லவேண்டும். உயரமாக வளர்ந்துவிட்டதாகக் கோகிலா சொன்னது, நம் தமிழ்ப் பண்டிதர் அடிக்கடி கூறுவதுபோல் உயர்வு நவிற்சியல்ல; உண்மையே' என்று மொழிந்தாள்.

மாற்றமில்லாத பசும்பொன் போல் பளபளத்துக் கொண்டிருந்த தரங்கிணியின் முகம், குங்குமச் சிவப் பாயிற்று. அவள் நாணத்தால் தன் கவிழ்ந்து கொண்டாள்.

'போதுமடி, உங்கள் பரிகாசம்.'

"உண்மையைச் சொன்னல், அது கேலியா?”

"நீ பாட்டுப் போட்டியில் வெற்றியடைந்து, முதல் பரிசு பெற்றுப் பிரமுகர்களின் புகழ்மாலையைத் தாங்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு வருஞ் செய்தி தெரிந்து தான், செயின்ட் தாமஸ் கான்வென்ட் மாணவிகளும், பெண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவிகளும், ஏன்? ஆசிரியர் பயிற்சிபெறும் வயது முதிர்ந்த மாணவிகளும் உன்னைக் காண வெடகப்பட்டுக் கொண்டு, முன்னதாகப் போய்விட்டனர் போலிருக்கு. அதோ பார்த்தாயா, செயின்ட் பிலோமின ஹாஸ்டலில் தங்கியிருக்கும் மாணவிகள்கூட வெளியில் விளையாடிக் கொண்டிருந்தவர் கள், நீ தோழிகளான நாங்கள் புடைசூழ வருவதைப் பார்த்துவிடடு, ஹாஸ்டல் அறைக்குள் போய் ஒளிந்து கொள்ள, விரைந்து ஒடுகிருர்கள்." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/14&oldid=1338430" இலிருந்து மீள்விக்கப்பட்டது