பக்கம்:தரங்கிணி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

139

'உம் கொட்டிய அவன் கண்களில் நீர் பணித்தது. "அவரே அப்படியென்ருல், அவருடைய சம்சாரத்தின் நிலையும், பெண்ணின் நிலையும் எப்படியிருக்கும் என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்; சார்!"

செளந்தரராஜன் வாய் திறக்கவில்லை. ஆனாலும் அவன் மனநிலை எப்படியிருக்கும் என்பதை ஜோஸப் ஊகித்து உணர்ந்துகொண்டான். ஆகவே, அவன் மேலும் செளந்தர ராஜனின் மனத்தைக் கரைக்க இதுதான் சமயமென்று கருதித் தொடர்ந்து பேசத்தொடங்கினன்.

'ரொம்ப நல்லவர்களான அவர்களுக்கு, இப்படியொரு கடுமையான சோதனையை ஆண்டவன் தரக்கூடாது, சார்! அதிலும், தரங்கிணியின் நிலையை நினைத்தால் கல்லும் கரையும். எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரத்தக் கண்ணிர் சிந்துகிருேம். அவளுடைய நற்குணத்தையும் நற்செயல்களையும் அறிந்தவர்கள், அவளுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலையைக் கேட்டு வருந்தாமலிருக்க் மாட்டார் கள்...'

செளந்தரராஜன், ஜோஸப் பக்கம் மெல்லத் திரும்பி, 'அதிருக்கட்டும்; ஜோஸப் பெண்ணின் தந்தைக்கு என்னை மிகவும் பிடித்துப் போய்விட்டது என்று சொன்னயே? அவருக்குப் பிடித்துவிட்டால் போதுமா? கூட இருந்து வாழ்க்கை நடத்தப்போகிற பெண்ணுக்குப் பிடித்திருக்க வேண்டுமல்லவா! அதல்லவா முக்கியம்? தரங்கிணி என்னைப் பற்றி என்ன எண்ணியிருக்கிருள் தெரியுமா?...” ஜோஸப் எச்சரிக்கையாகப் பேசலானன். "அவளுக்கும் உங்களைப் பிடித்து விட்டதாகத்தான் தெரிகிறது, சார்! பெற்ற பெண்ணின் உள்ளக்கருத்தைத் தெரிந்துகொண்ட தளுல்தான், எப்படியும் உங்களையே மாப்பிள்ளையாக்கிக் கொள்ளவேண்டும் என்று வாத்தியார் அவ்வளவு பிடிவாத மாயிருக்கிறர்: உங்கள் பெற்றேரின் சம்ம தத்தைப் பெறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/140&oldid=1338556" இலிருந்து மீள்விக்கப்பட்டது