பக்கம்:தரங்கிணி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

140

வதற்கான முயற்சிகளையெல்லாம் செய்து கொண்டிருக் கிருர் என்று எண்ணுகிறேன். பொதுவாகப் பெண்கள், அதிலும் ஒழுங்குக் கட்டுப்பாடுகளிலேயே வளர்ந்த உங்கள் இந்துப் பெண்கள், மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், தங்கள் உள்ளக் கருத்தை நாணம் பயிர்ப் பின்றி அவ்வளவு வெளிப்படையாக யாரிடமுஞ் சொல்ல மாட்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? தன் னுடைய உயிர்த்தோழிகளான என் தங்கையிடமும் பாகீரதியிடமும்கூட உங்களைப்பற்றி அவளுக்குள்ள அபிப் பிராயத்தைச் சொல்ல ரொம்பவும் வெட்கப்பட் டாளாம்......... 購急 -

செளந்தரராஜன் ஆவலையடக்காமல், "அப்படியா? அப்படியானல் தரங்கிணிக்கும் என் மீது......"என மேலே சொல்லக் கூச்சப்பட்டுக்கொண்டு, வார்த்தையை முடிக்கா மல் நிறுத்தின்ை. 3. "என் தங்கை மூலமாகச் சொல்லிப் பாகீரதியை உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன். நீங்களே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்களேன். அவள் உங்களுக்கு நெருங்கிய உறவுப் பெண்தானே!...” . பிணியைப் போக்க மருந்தை ஊசி வழியாக் ஏற்றுவது போல், ஜோஸ்ப், செளந்தரராஜன் தரங்கிணிமீது கொண் டுள்ள காதலை மிகுதிப்படுத்த, நயமொழிகளேச் சந்தர்ப்பம் பார்த்து உபயோகப்படுத்தின்ை.

ஊம் என்று உம் கொட்டியவாறு, செளந்தரராஜன் மீண்டும் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஜோஸப் அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தவாறு, "நீங்கள் கோபித்துக் கொள்ளவில்லையென்ருல், நான் ஒன்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். பிள்ளைகளா யிருக்கும் நாம், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு மதிப்புக்கொடுக்க வேண்டியதுதான். அவர்கள் சொல்லும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/141&oldid=1338557" இலிருந்து மீள்விக்கப்பட்டது