பக்கம்:தரங்கிணி.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141

141

விஷயங்களைக் கேட்க வேண்டியதுதான். அவர்கள் இடுங் கட்டளைகளே நிறைவேற்ற வேண்டியதுதான். ஆனல், எதற்கும் ஒர் எல்லையுண்டு; வரையறையுண்டு. அவர்கள் சொல்வது நல்லதா கெட்டதா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் அல்லவா! அவர்கள் சொல்லுகிருர்கள் என்பதற் காகக் கண்ணே மூடிக்கொண்டு எல்லாவற்றையும் செய்து விட முடியுமா? அம்மா, அப்பா சொல்லுகிருர்கள் என்ப தற்காக, அநியாயமான விஷயத்தையெல்லாம் கேட்டு நடக்கமுடியுமா? கேட்டுத்தான் நடக்கலாமா...? அதிலும் திருமணம் என்பது அவரவர்களின் சொந்தப் பிரச்சினை. நல்லதே கெட்டதோ அது அவர்களுடைய வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கக்கூடியது. அப்பேர்ப்பட்ட விஷயத் தில், சம்பந்தப்பட்டவர்களே சாதகபாதகங்களை ஆராய்ந்து பார்த்துத் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதுதான் முறை; நியாயமுங்கூட! தாங்களே தீர யோசித்து முடிவுக்கு வரவேண்டிய இவ் விஷயத்தில், மற்றவர்களைத் தலையிட அனுமதிப்பது-பெற்றவர்களாயிருந்தாலும் சரி-ஒருவர் அனுமதிப்பது சரியல்ல என்றுதான் நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ?...” என்று கூறி நிறுத் தினன். -

அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண் டிருந்த செளந்தரராஜன், மேலும் சிந்தனை செய்யலான்ை. "நீங்கள் என்ன பச்சிளங் குழந்தையா? நன்மை இது, தீமை இது நல்லது இது, கெட்டது. இது என்று பகுத் தறிந்து கொள்ளமுடியாத பாலப் பருவத்திலா இருக்கிறீர் கள், பெற்றேர்கள் உங்களைக் கட்டுப்படுத்துவதற்கு? இப்படி நட என்று கட்டளையிடுவதற்கு!...” என்று கேள்வி கள் கேட்டுக்கொண்டே வந்த ஜோஸ்ப், 'உங்கள் விருப்பம் இது என்று தெரிந்தும். நீங்கள் அந்தப் பெண்ணை விரும்புகிறீர்கள் என்று கேட்டறிந்தும், அதற்கு மாருக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/142&oldid=1338558" இலிருந்து மீள்விக்கப்பட்டது