பக்கம்:தரங்கிணி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143

143

படி நான் நடக்கத் தயார். அதற்கான ஏற்பாடுகளையெல் லாம் நீதான் செய்யவேண்டும். எனக்கு ஒன்றுத் தெரி யாது... என்று கேட்டுக் கொண்டான்.

"அப்படியே, சார்."

செளந்தரராஜன், ஜோஸ்பின் கரங்களைப் பிடித்துக் குலுக்கியவாறு, "என் எதிர்கால வாழ்க்கைக்கே வழி காட் டிய உனக்கு, எப்படிக் கைம்மாறு செய்வேன்? ஜோஸப்' என்று தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தினன்.

"நீங்கள் தரங்கிணியின் கரத்தைப் பற்றித் தைரிய மாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிவிட்டால், அதுவே எனக்கு நன்றி செய்ததுபோல நான் எடுத்துக் கொள்ளுவேன் சார்:

"நான், இனியும் பெற்ருேருக்கோ மற்றவர்களுக்கோ பயந்து, நாம் எடுத்திருக்கும் முடிவிலிருந்து விலகிப் பின் வாங்குவேன் என்று நினைத்தாயா? நான் அவ்வளவு கோழை யல்ல; நீ சந்தேகங்கொள்ளதே!. -

"ரொம்ப நன்றி, சார்! நீங்கள் போய்ப் பஸ்ஸில் ஏறுங் கள். உங்களை அதிக நேரம் நிறுத்தி வைத்துவிட்டேன்."

"நான் அல்லவா அப்பா, இதைச் சொல்ல வேண்டும்?" என்ற செளந்தரராஜன், "நான் போய் வருகிறேன். அதற்குமுன் ஒரு வார்த்தை. நாம் இப்போது பேசியுள்ள விஷயமெல்லாம் நம்மோடேயே இருக்கட்டும். பாங்கி லுள்ளவர்களுக்குத் தெரியவேண்டாம். எல்லாம் நடந் r தான பிறகு, தானகவே தெரிந்துபோகட்டும். என்ன!"

- "அை தயெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டாம், சார்! நீங்கள் ஜாக்கிரதையாக இருந்தால் போதும்." என்ற ஜோஸ்ப், எதிரே பார்த்து, "பஸ் வந்திருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/144&oldid=1338560" இலிருந்து மீள்விக்கப்பட்டது