பக்கம்:தரங்கிணி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145

145

களில் திருமண விழாக்கள் நடப்பதை அப் பெண்மணிகள் பார்த்துக்கொண்டே போயினர். சில வீடுகளில், வீதியை அடைத்துக் கொண்டு பெரிய பந்தல்கள் போடப்பட்டிருந் தன. மூவண்ணச் சீலைகளும், பலவண்ண மின்விளக்கு களும், மகர தோரணங்களும், மாவிலே, தென்னங்குருத் தோலையாலான கொடிகளும், குலையோடு கூடிய வாழை மரங்களும் கட்டி அழகு செய்யப்பட்டிருந்தன. பாண்டு வாத்தியங்களும், நாதசுர வாத்தியங்களும் பிரமாத மாக முழங்கிக் கொண்டிருந்தன. சிலவீடுகளில் மாவிலை களும், வாழை மரங்களும் மட்டும் கட்டி அலங்க ரிக்கப்பட்டிருந்தன. சாதாரண நாதசுர மேளம் ஒலித் துக் கொண்டிருந்தது. அவரவர் தகுதிக்கும் செல்வ நிலைக்கும் தகுந்தவாறு, இத் திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன என்பதை, இவ்வேறுபாடுகள் விளக்கப் படுத்திக் கொண்டிருந்தன. -

ஏழிசையை வாகனமாகக் கொண்டு இசைக்கும் இனிய பாடலைப்போல, அன்புத் தோழி காதரீனுடன் தரங்கினி சென்று கொண்டிருந்தாள், அவள் முகம் மகிழ்ச்சியோ துக்கமோ இன்றிப் பளிங்குபோல் காணப்பட்டது. அவள் உள்ளத்தில் உவகையோ அவலமோ சற்றும் இல்லையென்ப தையே,’அவளுடைய அப்போதைய முகபாவம் காட்டியது. அச்சமயம், அவளுடைய உணர்ச்சி அந்த அளவுக்கு மரத் துப் போயிருந்தது. இந்நிலையிலும், வரும் வழியில் கலியாண வீடுகளில் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாதசுர வாத்தியங்களின் அருமையான வாசிப்புக்கு, அவள் தலை அசைந்து கொண்டிருந்தது. இனிய இசையிலேயே எப்போதும் தோய்ந்து கொண்டிருந்த அவள் உள்ளமும், செவிகளும், நாதசுரவித்வான்களின் ராக ஆலாபனைகளி லும், சுர விந்நியாசங்களிலும், சாஹித்ய வாசிப்புகளிலும் ஈடுபடலாயின. -

- سسع هيit

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/146&oldid=1338562" இலிருந்து மீள்விக்கப்பட்டது