பக்கம்:தரங்கிணி.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

#46

அன்று முக்கிய முகர்த்த நாள் ஆனதால், எங்கு பார்த்தாலும், திருமணங்கள் நடந்து கொண்டிருந்தன.

சுப்பராய முதலி தெரு திரும்புகிற சமயத்தில், காத ரீனின் கயற்கண்கள் தரங்கினியின் முகத்தைக் கடைக் கணிக்கலாயின.

"தரங்கிணி! இன்று உன்னை நிலைக் கண்ணுடியில் பார்த்தாயா?

"எங்கள் வீட்டில் நிலைக்கண்ணுடி, ஏதடி?: "ஓ! தெரியாமல் சொல்லிவிட்டேன் என்ற காதரீன், "சிறு கண்ணுடியிலாயினும் உன் முகத்தைப் பார்த்திருப் பாய்; பின்னல் போட்டுப் பூச்சூடுவதற்கும் பவுடர் பூசிப் பொட்டு வைப்பதற்குமாயினும் பார்த்திருப்பாய். இல்லையா?"

தரங்கிணி பேசாமல் தலகுணிந்து கொண்டாள். 'உன்னைப் பார்த்தால், இப்போது எப்படி இருக்கிருய், தெரியுமா? தேவலோகத்திலிருந்து இறங்கிவந்த கந்தருவப் பெண்போல்...!! . . ."

போடி உனக்கு எப்போதும் கேலிப் பேச்சுத்தான், சமய சந்தர்ப்பங்கூடத் தெரியாமல்...:

இப்போது என்னடி, சமய சந்தர்ப்பங்கெட்டு விட்டது? நீ கலியாணஞ் செய்துகொள்ளப்போகிற இந்தச் சமயத்தில்தானே என்னைப்போன்ற சிநேகிதைகள் உன்னை இம்மாதிரிப் பரிகாசஞ் செய்வதற்கு வாய்ப்பு கிடைத் திருக்கு. அருமையான இத் தருணத்தைத் தவறவிட்டுவிட மனம் வருமா? . .

தரங்கிணி வாய் திறக்கவில்லை. 'நான் ஆண் பிள்ளையாகப் பிறக்காமல் போய்விட் டேனே என்று வருத்தமாய் இருக்குதடி, உன்னைப் பார்க் கும் போதெல்லாம்..." -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/147&oldid=1338563" இலிருந்து மீள்விக்கப்பட்டது