பக்கம்:தரங்கிணி.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

147

"ஏன்? உன் சின்ன அண்ணனுக்குப் போட்டியாக வருவதற்கா?...”

காதரீன் கொல் என்று சிரித்துவிட்டாள். அதன் பின்தான், தாங்கள் வீதியில் செல்கிருேம் என்ற நினைவு அவளுக்கு வந்தது. தரங்கிணிக்கு எப்படித்தான் இச்சமயம் இவ்விதம் தமாஷமாகப் பேச முடிந்ததோ!

சிவ விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. தரங்கிணியும் காதரீனும் ஜோடி மணிப்புருக்கள் போல் சென்றனர். ஆயினும், அவர்களிடையே காணப் பட்ட நடைபேதம், மட அன்னமும் குள்ள வாத்தும் சேர்ந்து சென்ருல் எப்படியிருக்குமோ, அதை நினைவு படுத் தியது.

இருந்தாற்போலிருந்து தரங்கிணி காதரீனப் பார்த் துச் சொன்னுள்: 'காதரீன், நினைத்தாலே வருத்தமா யிருக்கு. எனக்கு அறிவுதெரிந்து நான் இப்படிக் கபடமாக நடந்து கொண்டதில்லை. என்னைப் பெற்ற தாயிடங்கூடப் பொய் பேச வேண்டியதாய்விட்டது. (சிறிது நிறுத்தி) நேற்று நீ பாகீரதி மூலம் தகவல் சொல்லியனுப்பினய் அல்லவா, இன்று காலை என்னைத் தயாராக இருக்குமாறு. அதிலிருந்து எனக்கு ஒரே பரபரப்புத்தான்! இரவெல்லாம் துளிக்கூட உறக்கம் இல்லை. நான்வைகறையிலேயே எழுந்து விட்டேன். வீட்டு வேலைகளை அவசரம் அவசரமாகச் செய்து முடித்தேன். குளிரைக்கூடப் பார்க்காமல், கிணற்று நீரில் குளித்தேன். என்னடி இது பொறுக்கமுடியாத கொடிய பனியில் எழுந்து ஸ்நானஞ் செய்கிருய்? எங்கே...?'அம்மா கேட்டார்கள். அவர்கள் முகத்தில் புன்சிரிப்யும் இருந்தது. வியப்புங்கூட காணப்பட்டது. நான் வாய்கூசாமல், பொய் சொன்னேன். 'சாரதாவுக்கு இன்று பிறந்த நாளாம். அதற்காக அவள் அப்பா கற்பகாம்பாளுக்கு மஞ்சனமாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/148&oldid=1338564" இலிருந்து மீள்விக்கப்பட்டது