பக்கம்:தரங்கிணி.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

148

டிப் பூப்பாவாடை சாத்துகிருராம். அவசியம் அதற்கு வரவேண்டுமென்று அவள் கேட்டுக்கொண்டாள். பாகீரதி, காத்ரீன் எல்லாருமே போகப் போகிரு.ர்களாம். நான் மட்டும் போகாமலிருந்தால் நன்ருயிருக்குமா, அம்மா? காதரீனும் பாகீரதியும் காலையிலேயே வந்து கூப்பிட்டுக் கொண்டு போவதாகச் சொன்னர்கள்; அதனுல்தான்..." என்று நிறுத்தினேன். "சரி, சரி” என்று சொன்னர்களே தவிர, 'போய் வா அல்லது போகவேண்டாம்” என்று வேருென்றுஞ் சொல்லவில்லை. தாய்க்கு தெரியாத சூல் இல்லை என்பார்கள்; என் விதி வசம் பெற்றெடுத்த அன்னைக்குக்கூடத் தெரியாமல் இப்படிப் பொய் பேசி ஏமாற்றி, நான் கலியாணஞ் செய்துகொள்ளப் போகி றேன்..."

'நல்லது நடக்கப்போகும் இச் சமயத்தில், சும்மா இப்படிப் புலம்பி முகாரி ராகம் பாடிக்கொண்டுவராதேடி, தரங்கிணி உன் தலையெழுத்து நன்ருகத்தான் இருக்கு, ஒன்றுங் கோணலில்லை...' என்று காதரீன் அன்பாகக் கடிந்து கொண்டு சொன்னாள். 'வா, வா! வீடு வந்துவிட் நமக்காக எல்லாரும் காத்துக் கொண்டிருப்பார் " . لتيَ سا

so

é$óYT. » .

தரங்கிணி எதிரே நிமிர்ந்து பார்த்தாள். அப்போது தான், அவளுக்குத் தாங்கள் கனகராயர் இல்லத்”துக்கு. வந்துவிட்டது தெரிந்தது. உடனே அவள் உடம்பு ஒரு குலுங்கி குலுங்கி நின்றது. "இங்கே இப்போது எதற்கடி, காதரீன்? முதலில் நேரே கோவிலுக்குப் போய்க் கலியாணஞ் செய்துகொண்டு, பின்னல்..." -

அவள் தயங்கி தயங்கிச் சொன்னுள். கலியாண்ஞ் செய்து கொள்ளுவதற்கு ரொம்ப அவ ச, மாயிருக்கிறதோ! நீ பலே ஆள்தான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/149&oldid=1338565" இலிருந்து மீள்விக்கப்பட்டது