பக்கம்:தரங்கிணி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

i4

"ஏது? ஐரின்! நீ கூடக் கேலிப்பேச்சுப் பேசக் கற்றுக் கொண்டாய்? தரங்கிணி சிணுங்கியது, கிண்கிணி ஒலிப் பதுபோல் கேட்டது. "இன்று நான் உங்களுக்கு விளையாட் டுப் பொம்மையாகிவிட்டேன்-'

"நீ அப்படி நினைப்பது தவறு; தரங்கிணி மாந்தோப் பில் தன்னிச்சையாகப் பறந்து இனிமையாகக் கீதம் இசைக்கும் குயிலேப் பிடித்துக் கொண்டுபோய்க் கூட்டில் அடைத்துப் பார்க்க யாரேனும் விரும்பினர்கள் என்பன் த நீ கேட்டதுண்டா? அல்லது கண்டதுதான் உண்டா? தெவிட்டாத தீந்தமிழ் இசைக்கும் எழில் கோகிலம் நீ! உன்னை நாங்கள் ஒருபோதும் கேலிப்பேச்சால் சிறைப் படுத்த மாட்டோம். இன்றுபோல் என்றும் நீ குதுTகலமாக ஆடிப்பாடி மதுரகீதம் ஒலித்துப் பேரும் புகழும் பெற வேண்டுமென்ற ஆசையாலேயே, உன்னை உற்சாகப் படுத்தப் பலபடப் பாராட்டுகிருேம்.'

"சாரதா, சாதுரியமாகப் பேசி யாரையும் வசப்படுத் தக் கூடியவளான நீ என்னை மட்டந் தட்டுவதற்குக் கேட்கவா வேண்டும்? நன்ருகத்தான் பேசுகிருய்.” . 'இல்லாத பொல்லாத இச்சகமொழி பேசி நாங்கள் உன்னை உச்சி குளிர வைப்பதற்கு, நீ பிளைமவுத் காரில் வந்திறங்கும் பெருஞ் செல்வக் குடும்பத்துப் பெண்கூட இல்லையே! நீ எங்களைப் போன்ற நடுத்தரக் குடும்பத்து நங்கைதானே!"

பாகீரதி நீ சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை. நாமாயினும், நம் உணர்ச்சியை அடக்கிக்கொண்டு, பள்ளிக்கூடத்தை விட்டு வெகுதூரம் வந்தபிறகு, இவளைப் புகழ்ந்து பேசுகிருேம். மற்ற மாணவிகள் இவள் முதற் பரிசையும் பாராட்டையும் பெற்றுக்கொண்டு மேடையை விட்டு இறங்கியதுமே, சுற்றிலும் சூழ்ந்துகொண்டு, இவளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/15&oldid=1338431" இலிருந்து மீள்விக்கப்பட்டது