பக்கம்:தரங்கிணி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149

149

"காதரீன்! என்னைக் கேலி செய்வதை இப்போதும் விடமாட்டேன் என்கிருயே!” என்று கெஞ்சலாகச் சொன்ன தரங்கிணி, உங்க அம்மா அப்பாவை எப்படிப் பார்க்கிறதென்று அச்சமாயிருக்கிறதடி அவர்கள் என் னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருப்பார்களோ?”

"உன்னைப் போலப் பைத்தியக்காரி உலகத்தில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஆமாம், உன்னைப் பற்றி அவர்கள் என்ன எண்ணுவது? அவர்களுக்கு உன்னைப்பற்றி ரொம்ப நன்ருகத் தெரியும்...' .

முன்னே தன் வீட்டையடைந்த காதரீன், தரங்கிணி யின் கையைப் பற்றிக்கொண்டு, வாசற்படி ஏறிள்ை. தரங்கிணி தயங்கி நின்ருள். ; : காதரீன், முன்னைவிட அவள் மென்கரத்தைப் பற்றி 'வாடி என்ருல் வருவாயா? அதைவிட்டுக் கலியானப் பெண்ணைப்போல் நாணிக் கோணி நின்று...ஒ! நீ இப் போது கலியாணஞ் செய்துகொள்ளப் போகும் மணப்பெண் தானே! அதை மறந்துவிட்டேன், பார்! என்று மென் சிரிப்பை உகிர்த்துக்கொண்டே கூறி, மாப்பிள்ளை எதிர் கொண்டு வந்து அழைத்துக் கொண்டு போனல்தான் வருவாய் போலிருக்கு. அப்படியானல் இரு உள்ளே போப் அவரை அழைத்து வருகிறேன்" என்ருள். .

தரங்கிணி, தன் கைகளை அசைத்து ஏதோ சொல்ல வாய் எடுத்தாள், r -

"காதரீன்! என்ன, வீதியிலேயே நின்று பேசிக்கொண் டிருக்கிருய், உள்ளே அழைத்துக் கொண்டு வராமல்...'

தற்செயலாக வெளியே வந்த செல்லம்மாள், இவர் களைப் பார்த்துவிட்டுக் கூப்பிட்டாள்.

வா அம்மா! தரங்கிணி வா!' - . . . காதரீன் பின்னல் திரும்பிக் குனிந்து, தரங்கிணியின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு போய்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/150&oldid=1338566" இலிருந்து மீள்விக்கப்பட்டது