பக்கம்:தரங்கிணி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151

I5 I

"எங்களுக்குத் தெரிவிக்காமல் இரகசியமாகக் கலியாணஞ் செய்து கொள்ளலாம் என்று இருந்தாய் இல்லையா, தரங்கிணி?...... நீ சொல்லாவிட்டால் எங்களுக் குத் தெரியாதென்று நினைத்தாயா? உன் அழைப்பில்லா மலே, நாங்கள் கலியாணச் சாப்பாடு சாப்பிட வந்து விட்டோம். w

சாரதாவும் ஐரினும் போட்டி போட்டுக் கொண்டு சொல்லிக் கேலி செய்யலாயினர். தரங்கிணி நாணத்தால் குன்றிப்போய் ஒதுங்கி நின்ருள். இவர்களுக்கு எப்படி நம் கலியான விஷயம் தெரிந்தது?’ என்று அவள் மனம் நினைத்தது.

"சும்மா, இருங்கடி! என்று காதரீன் தோழிகளே அதட்டினுள். "எல்லாம், கலியாணம் சம்பிரமமாக முடிந்த பின், உங்கள் கேலிப் பேச்சையும் லாலிப் பாட்டையும் வைத்துக்கொள்ளுங்கள். பாகீரதி! இங்கே வா! தரங் கிணிக்கு அலங்காரஞ் செய்துவிடுவது, உன் வேலை. என்ன!...... தரங்கிணி நாங்கள் சொல்லுகிறபடி நீ வேறு உடைகளை மாற்றிக் கொள்ளணும்...உ.ம்."

இப்படிச் சொல்லிக்கொண்டே, காதரீன் பீரோவைத் திறந்து, புத்தாடைகளையும் நகைகளையும் எடுக்கலாஞள். இவற்றைக் கண்டு தரங்கிணி பிரமித்துப் போளுள். இவை யெல்லாம் கனவில் நடப்பதுபோல் அவளுக்குத் தோன்றி யது. விலையுயர்ந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவை, சரிகை பிழைத்த சோளி, சூரிய கிரணம் பட்டு டால் அடிக்கும் ந்ெக்லெஸ், பளபளக்கும் தோடுகள், வளையல்கள்! இவை ஒவ்வொன்றும் தந்தத்தால் கடைந்தெடுக்கப்பட்டது. போன்ற அவளுடைய அழகிய உடம்பையும் உறுப்புக்களே யும் அலங்கரித்துக் கொண்டு, வரும்போது, அவளுடைய மலைப்பு இன்னும் அதிகமாகியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/152&oldid=1338568" இலிருந்து மீள்விக்கப்பட்டது