பக்கம்:தரங்கிணி.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153

அவரவர்களுக்குத் தோன்றியபடியெல்லாம் தரங் கிணிக்கு ஒப்பனை செய்தனர். அவள் பதுமைபோல் அவர் களிடையே இருந்தாளே யொழிய, எவ்வித உணர்ச்சியை யும் வெளிப்படுத்தவில்லை. கடைசியாக, பாகீரதி, தரங்கிணி யின் செவ்வரி படர்ந்த கண்களுக்கு மை தீட்டினள். சாரதா குட்டிகூரா நறுமணப்பொடியை அவள் முகத்தில் அளவாகப் பூசினுள்.

அலங்காரம் எல்லாம் முடிந்தபிறகு, சரியாக இருக் கிறதா என்று பார்க்க, காதரீன், தரங்கிணியின் தோள் அருகே வந்து முகத்தை வைத்து, நிலைக் கண்ணுடியில் உற்றுப் பார்க்கலானள். அவளுக்கு என்ன தோன்றியதோ? தன் முகத்தைத் தரங்கிணியின் முகத்தோடு சேர்த்து வைத்துச் சிறிது நேரம் பார்த்துவிட்டு, அவளை, அன்பு மேலீட்டால் சேர்த்துக் கட்டிக்கொண்டு முத்தமிட்டாள்.

ஏற்கனவே, தரங்கிணியின் முகத்தில் அரும்பும் வியர் வையை மணப்பொடி கலையாமல் இருக்க அடிக்கடி கைக் குட்டையால் மெல்ல ஒத்தி எடுத்துக்கொண்டிருந்த ஐரின், "கடித்துத் தின்றுவிடாதேடி காதரீன்! அவளுடைய கணவனுக்கும் கொஞ்சம் இருக்கட்டும். அவள் கன்னத்தை ஆப்பிள் என்று நினைத்துக் கொண்டாயா, என்ன?...... p? என்று குறும்பாகச் சொல்லி, உதடுபட்டுக் கலைந்த இடங் களில் மீண்டும் மணப்பொடியை ஒத்தினள்.

சாரதா, காதரீனைப் பார்த்துக் கண்சிமிட்டியவாறு, காதரீனுக்கு ரொம்பநாளாக இந்த ஆசை இருந்தது. அதை இன்று தீர்த்துக்கொண்டாள். நாம் லேடி சிவ ஸ்வாமி ஐயர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டி டிருக்கையில், பாரதி பாட்டுப் போட்டியில் பாடித் தரங் கிணி தங்கப்பதக்கம் பரிசு பெற்றதைப் பாராட்டிப் பேசிக் கொண்டு வந்தபோது, காதரீன் சொன்னது உங்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/154&oldid=575349" இலிருந்து மீள்விக்கப்பட்டது