பக்கம்:தரங்கிணி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I54

நினைவில்லையா? ஏன் ஐரின், நீ இதையெல்லாம் நன்முக ஞாபகம் வைத்திருப்பாயே?

சாரதா கிண்டல் செய்வதைக் கவனியாமல், பாகீரதி, தன் இரு கைகளாலும் தரங்கிணியின் முகத்தை வழித்து, தன் கபோலங்களில் வைத்துச் சொடுக்கிக் கண்ணேறு கழித்தாள். -

"தரங்கிணிக்கு நம் கண்களே பட்டுவிடும், அடி!முக்கிய மாக,என் கண் மயிரைப் பிடுங்கிப் போடு, பாகீரதி: என்று, காதரீன் உணர்ச்சியுடன் சொன்னள்.

கூடத்துச் சுவரில் மாட்டப்பட்டிருந்த கடிகாரம் பத்துமணி அடித்தது.

இச்சமயம், செல்லம்மாள் அங்கு வந்து, "உங்களில் யாருக்குங் கேட்கவில்லையா, நாங்கள் கூப்பிடுவது காதரீன்? ரிஜிஸ்டிரார் வந்துவிட்டார். தரங்கிணியை அழைத்துக் கொண்டு வாசிக்கிரம்' என்று சொன்னவள், திடீரென நினைத்துக்கொண்டு, சாரதா, நீ தரங்கிணிக்கு த் தோழிப் பெண்ணுய் இருக்கணும் என்ன? என்ருள்.

சாரதா, தலையை யாட்டிவிட்டு, தரங்கிணியின் பின்னே போய் நின்று, அவள் தோள்களைப் பற்றிக்கொண் L. FT&T.

'உம், எல்லோரும் வாருங்கள்!" செல்லம்மாள் சொல்லிவிட்டு முன்னே போளுள்.

காதரீனும் பாகீதியும் இருபக்கமும் வர, சாரதா, தரங்கிணியைக் கூடத்துக்கு நடத்தி அழைத்துக்கொண்டு சென்ருள். மற்றைத் தோழிகள் முன்னும் பின்னுமாகப் போகலாயினர். . .

ரிஜிஸ்டிரார், கூடத்து நடுவே போடப்பட்டிருந்த நாற் காலியில் அமர்ந்து, தன்முன் மேஜைமீது விரிக்கப்பட் டிருந்த ரிஜிஸ்டர் புத்தகத்தில், ஏதோ எழுதிக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/155&oldid=575350" இலிருந்து மீள்விக்கப்பட்டது