பக்கம்:தரங்கிணி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155

டிருந்தார்.அவர் பக்கத்தில் சந்தோஷம்பிள்ளை உட்கார்ந்து ரிஜிஸ்டிடிரார் கேட்கும் தகவல்களை விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மற்றவர்கள், அவர்களைப் பார்த்துக் கொண்டு, மெல்லத் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந் தனர். -

தோழிகள் புடைசூழ, தரங்கிணி, தலை குனிந்தவாறு வெள்ளை அன்னம்போல் மென்னடையிட்டு வந்து கொண் டிருந்தாள். செல்லம்மாள்,அவளுக்கு வழிகாட்டுவதுபோல முன்னுல் மெல்லச் சென்ருள்.

மணப்பெண் வருகிருள் என்றதுமே, கூடத்திலிருந்த எல்லோரும் திரும்பிப் பார்த்தனர். நாணமே அழகு ஒவிய மாக ஒர் உருக்கொண்டாற்போல மெல்லடியிட்டு வரும் தரங்கிணியைக் கண்ட அவர்களுடைய கண்கள், இமைக்க நெடுநேமாயின.அவர்களுடைய கண்களில் ஒளிரும் கருமணி களில் தரங்கிணியின் அழகிய உருவம் பிரதிபலித்துச் சென்றது.

ரிஜிஸ்டிராரோ, தரங்கிணியின் கண்கொள்ளாப் பேரெழிலைக் கண்டு பிரமித்துப்போய், கையில் பேளுவைப் பிடித்தபடியே, நாற்காலியில் சாய்ந்துவிட்டார். -

செல்லம்மாள், தரங்கிணியை ரிஜிஸ்டிரார் முன்னிலை யில் நிற்கவைக்குமாறு குறிப்புக் காட்டினள். அவ்விதமே சாரதா தரங்கிணியைப் பிடித்து நிற்க வைத்தாள். கவிழ்ந்த தலையைச் சிறிது நிமிர்த்த சாரதா, தன் கையைத் தரங்கிணியின் மோவாயண்டை கொண்டு போனள். தரங்கிணி, குனிந்த தலையை நிமிரவேயில்லை.

ரிஜிஸ்டிரார் முன்னதாகக் கேட்டறிய விரும்பிய விவரங்களையெல்லாம் கூறி முடித்ததும், சந்தோஷநாதம் பிள்ளை, தங்கராஜை நோக்கிக் கண்ணுல் ஜாடை காட்டி னர். அவன் உடனே எதிர் அறையண்டை போய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/156&oldid=575351" இலிருந்து மீள்விக்கப்பட்டது