பக்கம்:தரங்கிணி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I56

ஜோஸப்' என மெல்ல அழைத்தான். அடுத்த கணம், ஜோஸப், செளந்தரராஜனே அழைத்துக்கொண்டு அறை யிலிருந்து வெளியே வந்தான். செளந்தரராஜன், கதர்ப் பட்டு வேட்டி, சட்டைகளே உடுத்திருந்தான். சரிகைக் கரைப்ேபாட்ட மேல் வேட்டியை உருமாலேயாகப் போட் டிருந்தான்.இடது மணிக்கட்டில் தங்கச்செயினில் மாட்டப் பட்டிருந்த விலையுயர்ந்த கடிகாரத்தைக் கட்டியிருந்தான். கைவிரலில் நீலக்கல் மோதிரம் ஒன்று விளங்கிக் கொண் டிருந்தது. அவனுடைய அகன்ற நெற்றியில் திருநீறும் சந்தனப் பொட்டும் திகழ்ந்து கொண்டிருந்தன. எடுப்பான மூக்கின்மீது தங்கவிளிம்பு போட்ட மூக்குக்கண்ணடி மிளிர்ந்து கொண்டிருந்தது. நடுவகிடு எடுத்து வாரிவிடப் பட்ட அமெரிக்கன் கிராப், அவனுடைய அழகிய முகத் துக்கு மேலும் அழகு செய்துகொண்டிருந்தது. -

ஜோஸ்ப், செளந்தரராஜன. தரங்கிணிக்குப் பக்கத் தில் கொண்டுவந்து நிறுத்திவிட்டு, அவன் பின்னல் நின்றன். அவன் பார்வை, தரங்கிணிக்கும் செளந்தரராஜ னுக்கும் உள்ள ஜோடிப் பொருத்தத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது. தரங்கிணியின் தலைக்குமேலே செளந்தர ராஜனின் திரண்ட தோள் உயர்ந்திருந்தது. -

"சரியான ஜோடிப் பொருத்தம்!" - "ஒருவர் இன்னெருவருக்கென்றே பிறந்ததுபோல் அல்லவா கன பொருத்தமாயிருக்கிறது!" . -

'மணமக்கள் என்று இருந்தால் இப்படித்தான் இருக்க் வேண்டும்." .

"ரதி, ரதி என்று சொல்லுகிருர்களே, அவள் இந்தச் கலியாணப் பெண்ணின் கால் சுண்டுவிரல் அழகுக்குக்கூடக் சமமாக மாட்டாள் அடடா என்ன அழகு! என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/157&oldid=575352" இலிருந்து மீள்விக்கப்பட்டது