பக்கம்:தரங்கிணி.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

for

லாவண்யம்! பார்க்கப் பதினருயிரம் கண்களல்லவா வேண்டும் போலிருக்கு:

"பிள்ளைக்குத்தான் என்ன மன்மதன் கெட்டான் போங்க்ள்! ராஜாதிராஜன் போலல்லவா இருக்கிருன்! ஆயுசெல்லாம் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தால்கூட ஆசை தீராது, ஐயா?”

அங்கிருந்தோர், மணமக்களுடைய செளந்தரியத்தில் மயங்கிப்போய்த் தங்களுடைய உணர்ச்சியை வார்த்தை களாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

சொர்ண விக்கிரகம் போலுள்ள இந்தப் பெண்ணைத் தான், இந்தப் பிள்ளையின் பெற்ருேர், பணமில்லாத காரணத்தால் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் களாம்!” -

விஷயமறிந்த ஒருவர், மெல்ல மற்றெருவர் காதில் கிசுகிசுத்தார். -

'அதனால்தான், அவர்களின் பணப் பேராசையில் மண்ணைக் கொட்டுவதுபோல, பெண் வீட்டாருக்குப் பைசா செலவு வைக்காமல், பிள்ளேயே பெண்ணுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபாரணங்களேயெல்லாம் வாங்கிக் கொடுத்துக் கலியாணஞ் செய்து கொள்ளுகிருப் போலிருக்கு."

"உஷ். மெதுவாகப் பேசுங்கள். வேறு யார் காதிலா யினும் விழப்போகிறது." -

மற்ருெருவர் எச்சரித்தார். "சும்மா இருங்கள், ஐயா ரிஜிஸ்டிரார் மணமக்களைப் பார்த்து ஏதோ கேட்கிரு.ர். என்னவென்று கேட்போம்.” இன்னொருவர், மற்றவர்களைப் பார்த்துக் கையமர்த் தினர். . . . . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/158&oldid=575353" இலிருந்து மீள்விக்கப்பட்டது