பக்கம்:தரங்கிணி.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

அந்த மனிதர் குறிப்பிட்டதுபோல், ரிஜிஸ்டிரார், : மணமக்களைக் கேள்விகள் கேட்டுக் கொண்டே, தம் ரிஜிஸ்டரில் ஒவ்வொன்ருகப் பதிவு செய்யலானர்.

"உங்கள் இருவரின் பெயர்களையும், பெற்முேர் பெயர் களையும், உத்தியோகத்தையும் முன்பே கேட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் கேட்கும் முக்கிய கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொன்னல் போதும்." செளந்தரராஜன், ரிஜிஸ்டிராரின் கேள்வியை ஏதிர் பார்த்துக் கொண்டிருந்தான்.

"நீங்கள் இந்தப் பெண்மணியை விரும்பித்தானே திருமணஞ் செய்து கொள்ளுகிறீர்கள்?”

"ஆமாம், முழு விருப்பத்துடன்தான் தரங்கிணியை நான் திருமணஞ்செய்து கொள்ள முன்வந்திருக்கிறேன்... "ஜோஸப் குரலா இது? தரங்கிணியின் நெஞ்சம் அவளேக் கேட்டது. தலைநிமிர்ந்து தன்பக்கத்தில் இருப்ப வரைத் திரும்பிப் பார்க்க எண்ணினள். ஆனால், அவளுள் எழுந்த நாணம், அவளை அவ்விதம் பார்க்க வெட்டாமல் தடுத்துவிட்டது.

ரிஜிஸ்டிரார். தரங்கிணியைப் பார்த்துக் கேட்டார்: "ஏனம்மா, நீங்கள் இவரைக் கலியாணஞ் செய்து கொள்ள முழுச் சம்மதந்தானே?" -

தரங்கிணி தலையை நிமிராமலே, சம்மதந்தான். என்ருள்.

ரிஜிஸ்டிரார், 'ஐயா, இன்று நான் திருமணச் சட்டப் படி செய்துகொள்ளும் பதிவுத் திருமண வாயிலாக மனைவியாக ஏற்றுக்கொண்டிருக்கும் தரங்கிணியை, இன்பத்திலும் துன்பத்திலும், எந்நிலையிலும் இணைபிரிய மாட்டேன்; தாம்பத்திய வாழ்வுக்கு மாமுக நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/159&oldid=575354" இலிருந்து மீள்விக்கப்பட்டது