பக்கம்:தரங்கிணி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

i5

வானளாவப் புகழத் தொடங்கிவிட்டார்களே!அதெல்லாம் கூட வெறும் வெற்றுப் பேச்சுத்தான?”

"நான் பாரதி பாட்டுப் போட்டியில் பங்குகொண்டு பரிசு பெற்றதும் போதும், உங்கள் வாயில் சிக்கிக்கொண்டு படாத பாடுபடுவதும் போதும்!”

தரங்கிணி அலுத்துக் கொண்டாள்.

'இராம துரதரான அனுமாருக்குத் தன்னிடமுள்ள மகத்தான சக்தி தெரியாதாம்; அதுபோல, தரங்கிணிக்கும் அவளிடம் அமைந்திருக்கும் அறிவாற்றல் தெரியவில்லை. நாம் ஏதோ அவளே முகஸ்துதி செய்வதாக எண்ணு கிருள்."

'இதுதான், நம்முடைய ஆங்கில ஆசிரியர் சொல்வது போல் inferiority complex (தாழ்வு மனப்பான்மை) என்பது."

"நம்மவர்கள், எந்தத் துறையிலும் மற்ற இனத் தாரைப் போல் அதிகம் முன்னேருமலிருப்பதற்கு, தன்னையே வியந்து கொண்டிருக்கும் அதிகத் தருக்குக் கொண்டோர் ஒரு பக்கமும், மிகவும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் மற்ருெரு பக்கமும் இருப்பதுதான் காரணம் என்று, அந்த உபாத்தியாயர் பாடஞ் சொல்லி, வருகையில் அடிக்கடி சொல்லுவாரே, ஞாபகம் இருக்கிற தல்லவா!'

"தரங்கிணி பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்தால் இப்படித் தன்னைப்பற்றித் தாழ்வாக எண்ணிக்கொண் டிருக்க மாட்டாள்...” - -

'தரங்கிணி குபேர சம்பத்துடைய கோடீசுவரர் குடும் பத்தில் பிறந்திருக்க வேண்டியவள்; எப்படியோ தவறிப் போய்..." - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/16&oldid=1338432" இலிருந்து மீள்விக்கப்பட்டது