பக்கம்:தரங்கிணி.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159

துரோகஞ் செய்யமாட்டேன் என்று, இதன் மூலம் உறுதி கூறுகிறேன் என்று சொல்லுங்கள்."

செளந்தரராஜன், ரிஜிஸ்டிரார் சொன்னபடியே திரும்பிச் சொல்லி, உறுதிமொழி அளித்தான்.

கணிர் கணிரென்று ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தந் திருத்தமாகச் சொன்ன செளந்தரராஜனின் மொழிகளைக் கேட்டதும், தரங்கிணி அதிர்ந்து போள்ை. "இது ஜோஸப், குரல் இல்லையே! அவன் வார்த்தைகளை இவ்வளவு தெளிவாக உச்சரிக்கமாட்டானே! இது வேறு ஒருவருடைய குரலாகவல்லவா இருக்கிறது? இக் குரலை வேறெங்கோ அல்லவா கேட்டது போலிருக்கு! எங்கு கேட்டிருப்போம்? இது யாருடைய குரல்?” என்றெல்லாம் அவள் மனம் சிந்தனை செய்து, ஆராயத் தொடங்கியது.

அவளையறியாமலே, அவள் சிரம் நிமிர்ந்து, தன்பக்கத் தில் நிற்பவரைப் பார்த்தது. உடனே அவள் கண்கள் அவ் வுருவத்தின்மீது நிலைகுத்தி நின்றுவிட்டது. இது சிதம்பரத் திலிருந்து என்னைப் பார்க்கவந்த எம். காம். பிள்ளை யல்லவா? இவர் எப்படி இங்கு வந்தார்? எவ்விதம் என்னைக் கலியாணஞ் செய்துகொள்வதற்கு உடன்பட்டார்? தாய் தகப்பளுருக்குத் தெரியாமலா இங்கு வந்து ரிஜிஸ்டர் மணம் செய்து கொள்கிருர்? காதரீன் குடும்பத்தாருக்கு இவரை எப்படித் தெரியும்? இவர்களே இவர் இவ்விஷயத் தில் எப்படித் தொடர்பு கொண்டார்? எல்லாம் ஒரே அதிசயமாக இருக்கிறதே ஒரு வேளை ஜோஸப்.........?

ஜோஸப் இருக்கவேண்டிய இடத்தில்தான், சிறிதும் எதிர்பாராத வகையில் செளந்தரராஜன் இருப்பதைக் கண்டு, தரங்கிணிக்குச் சொல்லொணுத் திகைப்பு உண் டாய்விட்டது. ஒன்றும் புரியாமல், அவள், தன் உள்ளத் தினுள் குழம்பிக் கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/160&oldid=575355" இலிருந்து மீள்விக்கப்பட்டது