பக்கம்:தரங்கிணி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இதற்குள் ரிஜிஸ்டிரார், தரங்கிணியை நோக்கி" செளந்தரராஜன் சொன்னதுபோல் சொல்லச் சொன்னர். தரங்கிணியின் வாயிலிருந்து உடனே வார்த்தைகள் வரவில்லை. அவளுக்குப் பின்னல் நின்றிருந்த சாரதா, அவளே ரிஜிஸ்டிரார் செல்லுகிறபடி சொல்லுமாறு தூண்டினுள். தரங்கிணி பிரமை பிடித்தவள்போல் நின்றி ருந்தாளேயொழிய வாய் திறக்கவில்லை. இது கண்டு பாகீரதி பதறிள்ை. காதரீன் மனங்கலங்கிள்ை. ஜோஸப் துடிதுடித்தான். செளந்தரராஜன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். -

சிறிது தூரத்திலிருந்து செல்லம்மாள் சமீபத்தில் வந்து, 'தரங்கிணி, ஐயா சொல்லச் சொல்கிறபடி சொல் லம்மா' என்று பரிவோடு கூறினள்.

"ஆமாம் குழந்தை சொல்லு: நேரமாகிறது. பார்!" சந்தோஷநாதம் பிள்ளையும் சொன்னர். ... s சாரதா, மறுபடியும் தரங்கிணியின் தோள்களைப் பற்றி உலுக்கினுள். - o

இவ்வளவும் நடந்தபிறகே, தரங்கிணி உறக்கத்தி லிருந்து திடுக்கிட்டு விழித்தவள்போல், ரிஜஸ்டிரார் சொல்லி வந்தபடி, பின்தொடர்ந்து மெல்லச் சொல்லலா இள்ை. -

அடுத்து ரிஜிஸ்டரார், தாம் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த ரிஜிஸ்டர் பாரத்தை மணமக்கள்முன் தள்ளி, 'சரி இந்தப் பாரத்தில் நீங்கள் இருவரும் கையெழுத்துப் போடுங்கள்' என்று கூறினர். அவர் சொல்லியவிதமே முதலில் செளந் தரராஜன் அப் பாரத்தில் கையெழுத்துப்

'ா-ான் அடுத்து. சாரதா தரங்கிணியை ீ செய்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/161&oldid=575356" இலிருந்து மீள்விக்கப்பட்டது