பக்கம்:தரங்கிணி.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

தாம்பூலங்களை ஒரு தட்டில் வைத்துக்கொடுத்து, மரியாதை யுடன் வழியனுப்பினர். மணமகனும் ஜோஸபும் தங்க ராஜும் அவருக்கு வணக்கஞ் செலுத்தினர். 'இன்று என் உத்தியோகக் கடமையுடன், மகத்தான காரியம் ஒன்றைச் செய்த திருப்தியும் மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொல்லிச் சிரித்தவாறே, அவர், தம் சிப்பந்தியுடன் அவ் விடத்தை விட்டு அகன்ருர்.

"வாத்தியார் சார்! வாருங்கள். இன்னும் ஏன் அங்கேயே இருக்கிறீர்கள்? அம்மாவுடன் வந்து, உங்கள் மகள் மணுளனுடன் மணக்கோலத்தில் இருப்பதைக் கண் குளிரப் பார்த்துவிட்டு வாழ்த்துங்கள்.

சந்தோஷநாதம் பிள்ளை வாசல் பக்கத்து அறையைப் பார்த்துச் சொன்னர். உடனே பரமசிவம், ஆனந்தக் கண்ணிருடன் வெளியே வந்தார். செல்லம்மாளும் பாகீரதி யும் போய்க் காமாட்சியம்மாளே அழைத்து வந்தனர்.

தன் தாய் தந்தையரைக் கண்டதும் தரங்கிணிக்கு உடம்பு புல்லரித்தது. தனக்கு ஆச்சரியத்தின்மேல் ஆச்சரியம் காத்திருப்பதறிந்து அவள் திக்குமுக்காடினள். அவளுடைய உள்ளத்தில், இப்போது எழுந்திருப்பது சந்தோஷமா? துக்கமா? என்று அவளால் உணர முடிய வில்லை.

அப்போது ஏற்பட்ட உணர்ச்சியைத் தாங்கமாட்டா மல், அவள், "அம்மா, அப்பா!! எனக் கூறியவாறே பெற்ருேரை நோக்கி ஒடிஞள்.

"உன்னை நல்வாழ்வு வாழவைக்கப் பெருமுயற்சி யெடுத்துக்கொண்ட அந்த மனிததெய்வங்களை முதலில் வணங்கி ஆசிபெறு, அம்மா!' என்று, பரமசிவம் சந்தோஷ நாதம் பிள்ளை தம்பதிகளே நோக்கிக் கை காட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/163&oldid=575358" இலிருந்து மீள்விக்கப்பட்டது