பக்கம்:தரங்கிணி.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

பாகீரதி, செல்லம்மாள் கையைப்பிடித்து அழைத்துப் போய், சந்தோஷநாதம் பிள்ளை பக்கத்தில் நிற்க வைத் தாள். தரங்கிணி, அவர்கள் காலில் விழுந்து வணங்கிள்ை. அவளுக்கு முன்பே, செளந்தரராஜன் நெடுஞ்சாண்கிடை யாய் விழுந்துவிட்டான்.

சந்தோஷநாதம் பிள்ளை பதறிப் போய், அவனைக் கைலாகு கொடுத்துத் துரக்கினர். பின் அவர், அவன் கரங் களைப் பற்றியபடியே, "படித்த பிள்ளை; உங்களுக்கு நாங்கள் அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. தரங்கிணி எளிதில் கிடைத்தற்கரிய பெண் இரத்தினம்! உங்கள் குடும்பத்துக்கு நந்தாமணி விளக்காகத் திகழ்வாள். அவளுக்கு யாதொரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது உங்கள் கடமையாகும் என்று கூறினர். செல்லம்மாள், தரங்கிணியின் முகத்தைத் தன் இரு கரங்களாலும் பற்றித் தலையை உச்சிமோந்து, வாழ்த் தினள்.

"நீங்கள் என்பால் வைத்திருக்கும் நம்பிக்கைக்குப்பாத் திரமாக நான் நடந்துகொள்வேன், ஐயா என்று அடக்க மாகச் சொன்னன், செளந்தரராஜன்.

அடுத்து, அவன் தன் மாமனர் மாமியார் கால்களில் விழுந்து வணங்கினன். காமாட்சியம்மாள் ஒதுங்கிக் கொள்ள முயன்ருள். தரங்கிணியும் வணங்கி எழுந்தாள். "நீங்கள் பதினறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ வேணும்."

பரமசிவம் நெஞ்சந் தழுதழுக்க ஆசி மொழிந்தார். "தீர்க்க சுமங்கலியாய் இரு அம்மா!" காமாட்சியம்மாள், தரங்கிணியைச் சேர்த்தனத்துக் கொண்டு, சிரத்தின்மீது கைவைத்துச் சொன்னுள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/164&oldid=575359" இலிருந்து மீள்விக்கப்பட்டது