பக்கம்:தரங்கிணி.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தோழிகள், தாங்கள் கொண்டு வந்திருந்த பரிசுகளைத் தரங்கிணியிடம் தரலாயினர். மாலைகளையும் அணிந்தனர்; மாப்பிள்ளைக்கும் அணியச் செய்தனர்.

மகிழ்ச்சியான இக்காட்சிகளேயெல்லாம், ஒருபுறம் சுவ ரோரமாக ஒதுங்கி நின்று. ஜோஸ்ப், உவகை பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.

இந்த ஆரவாரமெல்லாம் ஒருவிதமாக அடங்கிய பின்னர், தரங்கிணியின் கண்கள், அங்கிருப்போரிடையே ஜோஸப் எங்கு இருக்கிருன் என ஆராயலாயின. அவன் நின்றிருக்கும் இடத்தைப் பார்த்ததும், இத்தனை பேருக்கு நடுவேதான் அவனிடம் எப்படி நன்றி தெரிவிப்பது என்று தவிக்கலாள்ை. இந்தச் சங்கடத்ததத் தீர்க்க முற்படுபவன் போல், செளந்தரராஜன், ஜோஸப்பிடம் போய், அவன் கரங்களே அன்பாகப் பற்றிக்கொண்டு, ஜோஸப், உனக்கு நான் எப்படி நன்றி சொல்லுவதென்றே தெரியவில்லை. எனக்கு இன்பவாழ்வளித்த நீ உன் வாழ்க்கையில் எல்லா விதமான ஏற்றங்களையும் பெற்று, இனிது வாழ இறைவன் திருவருள் புரிய வேண்டும்" என்று மொழிந்தான்.

கணவனைப் பின் தொடர்ந்து வந்த தரங்கிணி, ஆமாம்,அண்ணு! ஆண்டவன் உங்களுக்கு எல்லா நன்மை களும் வழங்குவார். இது நிச்சயம். பரோபகாரியல்லவா நீங்கள். மேலே பேசமுடியாதபடி, நன்றியுணர்ச்சி அவளுடைய நெஞ்சை அடைத்தது. ...} தரங்கிணி அண்ணு' என வாய்நிரம்ப அழைத்த தைக் கேட்டு, ஜோஸபுக்கு மெய் சிலிர்த்தது. அவனையறி. யாமல், அவன் கண்களில் நீர் ததும்பியது. "நான் என்ன அப்படிப் பிரமாதமாகச் செய்துவிட்டேன். இருவரும் சேர்ந்துகொண்டு என்ன ஒரேடியாகப் புகழ்ந்து பேசுகிறீர் ਾਂ மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடம்ை இது." . : ; . - ' 3.x.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/165&oldid=575360" இலிருந்து மீள்விக்கப்பட்டது