பக்கம்:தரங்கிணி.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

சந்தோஷநாதம் பிள்ளை அங்கு வந்து, "கார் வந்து காத்திருக்கிறது. மணியும் பத்தரைக்குமேல் ஆகிவிட்டது மாப்பிள்ளை! முதலில் நீங்கள் உங்கள் மனைவியை அழைத் துக் கொண்டுபோய், உங்கள் பெற்றேரிடம் ஆசீர்வாதம் பெற்று வாருங்கள். -

செளந்தரராஜன் கையைப் பிசைந்தான்.

"எப்படி ஐயா, அவர்கள் முகத்தில் போய் விழிப் பேன்? அப்பா ரொம்பக் கோபக்காரர் ஆச்சே!...”

பிள்ளையவர்கள், "நீங்கள் என்ன தப்புச் செய்து விட்டீர்கள், பயப்பட? அவர்கள் கோபித்துக் கொண்டா லும், பரவாயில்லை. அவர்களின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள். விடாதீர்கள் என்று யோசனை சொன்னர்.

"ஆமாம்: தயங்காமல் போய் வாருங்கள் மாப்பிள்ளை; பெற்றவர்கள் ஆசியைப் பெறுவது அவசியம். பரமசிவமும் வற்புறுத்திக் கூறினர். செளந்தரராஜன் சிந்தனையுடன் புறப்பட்டான். எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டான். தரங்கிணிை யும், அனைவரிடமும் சொல்லிக் கொண்டாள். கடைசியாக, காதரீனிடம் வந்து, அவள் கரத்தைப்பற்றி, "காதரீன்! நீ உன் அண்ணனுடன் சேர்ந்துகொண்டு, எவ்வளவு காரியங் களைச் சாமர்த்தியமாகச் சாதித்திருக்கிருய்? இவ்வளவும் திட்டமிட்டுச் செய்துவிட்டுக் கடைசிவரை ஒன்றுந் தெரி யாததுபோல் என்னிடம் நீ நடமாடினயே? மகா கள்ளியடி நீ! இரு, இரு. எனக்கும் ஒரு சந்தர்ப்பம் வரும். அப்போது வட்டியும் முதலுமாகச் செலுத்தி விடுகிறேன். இந்த நாட கத்தில், பாகீரதியும் முக்கிய பாத்திர'மேற்றிருக்கிருள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?" என்று பக்கத்தி லிருந்த பாகீரதியைப் பார்த்துக் கேட்டாள், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரங்கிணி.pdf/166&oldid=575361" இலிருந்து மீள்விக்கப்பட்டது